இந்துப்பு பயன்படுத்துபவரா நீங்கள்? அளவுக்கு மீறினால் ஆபத்தாம்
பாறையில் இருந்து உடைத்தெடுக்கப்பட்டு சந்தையில் விற்கப்படும் உப்பு தான் இந்துப்பு. இதை பாறை உப்பு என்றும் கூறலாம்.
இந்துப்பு மிகவும் மங்கலான பழுப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் இருப்பதால், சாதாரண உப்பில் இருந்து இதை வேறுபடுத்திக் காட்டுவது எளிதாகும்.
பல்வேறு சாதகங்களை கொண்டுள்ள இந்துப்பை பயன்படுத்துவது குறித்து, நம்மில் பலருக்கும் சந்தேகம் நிலவுகிறது.
உப்பின் குணங்கள்
இந்துப்புக்கு என்று நிறைய மருத்துவ குணங்கள் உண்டு. சித்த மருத்துவத்திலும் இந்த உப்புக்கு தனி இடம் அளிக்கப்பட்டுள்ளது.
சித்த மருத்துவத்தில், இதற்கென்று பாறையுப்பு, சோமனுப்பு, சந்திரனுப்பு, மதியுப்பு என பல்வேறு பெயர்கள் உள்ளன.
இமயமலை அடிவாரத்தில் எடுக்கப்படும் இந்த உப்பு, ஆங்கிலத்தில் ‘ஹிமாலயன் சால்டு (உப்பு) என்றும் கூறப்படுகிறது. மேலும் பஞ்சாப் மாநிலப் பகுதிகளிலும் இந்துப்பு பரவலாக கிடைக்கிறது.
இயற்கையான குணங்கள்
எலும்புகளுக்கு வலுவூட்டும் கால்சியம், தசை நார்களை சீராக்கும் பொட்டாசியம், உடலுக்கு சத்தூட்டும் அயோடின் உள்ளிட்ட தாத்துக்கள் உள்ளன.
அவற்றுடன், சாதாரண உப்பில் இருப்பதை விடவும் சோடியம் குளோரைடு வேதியல், இதில் அதிகளவில் உள்ளது.
சாதாரண உப்பை அனைத்து சமையல்களுக்கும் பயன்படுத்தப்படுவதை போன்று, இதையும் பயன்படுத்தலாம்.
இந்துப்பு பயன்பாடு
இளஞ்சூடான நீரில் இந்துப்பை போட்டு வாய் கொப்பளித்து வந்தால், வாயில் வரும் துர்நாற்றம் நீங்கும். பல் வலி, ஈறு வீக்கம் போன்ற பிரச்னைகளும் குணமடையும்.
குளிக்கும் இதை போட்டு குளித்தால், இரும்புச் சத்து கிடைக்கிறது. மேலும் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்வதற்கும், உடலை குளிர்ச்சியுடன் வைப்பதற்கும் இந்துப்பு உதவுகிறது.
ஆளவுக்கு மீறினால் ஆபத்து
பல்வேறு மருத்துவக் குணங்கள் இந்துப்புக்கு இருந்தாலும், அளவுக்கு மீறி இதை பயன்படுத்தக் கூடாது. இந்துப்பு உணவில் சேர்த்து வந்தால், சிறுநீரகப் பிரச்னை சீரடையும் என்கிற கருத்தில் துளியும் உண்மை இல்லை.
குடல்கள் உணவை நன்றாக உறிஞ்சி எடுக்க இந்துப்பு மிகவும் உதவுகிறது. மேலும் இது நிம்மதியான உறக்கத்தை தருவதாகவும் தைராய்டு பிரச்சனைக்கும் நல்ல தீர்வாக இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.