கரையாத கொழுப்பையும் பல மடங்கு வேகத்தில் கரைக்கும் அதிசய பானம்... இந்த ஒரோ ஒரு பொருள் போதும்!
`கொழுத்தவனுக்கு கொள்ளு; இளைத்தவனுக்கு எள்ளு’ பலமுறை கேட்ட முதுமொழி. ஆனால், அர்த்தம் நிறைந்தது.
கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு அத்தனை சக்தி உண்டு. அதற்காக, இதை வெறும் கொழுப்பைக் குறைக்கும் உணவு என்று சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது. `ஏராளமான மருத்துவப் பலன்களையும் உள்ளடக்கியது.
அத்தகைய கொள்ளை பயன்படுத்தி டீ தயாரித்து குடித்தால் எடையை குறைக்கலாம். கொள்ளு டீ தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
கொள்ளு டீ
தேவையான பொருட்கள்
- கொள்ளு - 50 கிராம்
- இந்துப்பு- தேவைக்கு
முன் தினம் இரவு கொள்ளை கல் நீக்கி ஊறவைக்கவும்.
மறுநாள் 400 கிராம் தண்ணீரில் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
இதை வடிகட்டி கால் டீஸ்பூன் அளவு இந்துப்பு சேர்த்து குடிக்கவும்.
பலன்கள்
உடலில் கெட்ட கொழுப்பை சேர்க்காமல் பாதுகாக்கும் தன்மை இதற்கு உண்டு.
எடையை கட்டுக்குள் வைக்கும்.
உடலுக்கு வலு கொடுக்கும்.
இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்களை கொண்டுள்ளது.
தேவையற்ற கொழுப்பை கரைத்துவிடும். தினமும் டீக்கு பதிலாக இதனை பருகினால் பலன் அதிகம்.