2025ல் அதிக சம்பளம் பெற உதவிய டாப் ஐந்து திறமைகள் எவை தெரியுமா?
2025ம் ஆண்டில் ஏஐ குறித்த துறைகளின் வளர்ச்சி அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் 2025 இல் அதிக சம்பளம் பெற உதவிய ஐந்து வேலைகள் பற்றி பார்க்கலாம்.
அதிக சம்பளம் பெற உதவிய வேலைகள்
அதிக சம்பளத்தில் வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் அதற்கு கையில் டிகிரி மட்டும் இருப்பது போதாது. அதோடு சேர்த்து கூடவே சிறப்பான திறன்களும் எடுக்க வேண்டும்.
புத்தகத்தை படித்தால் மட்டம் கைநிறைய சம்பளத்திற்கு வேலைக்கு போகலாம் என நீங்கள் இதுவரை நினைத்துக்கொண்டு இருந்தால் அது முற்றிலும் தவறு.
அப்படி பார்த்தால் எலகில் டிகிரி முடித்த அனைவரும் கைநிறைய சம்பளம் எடுக்கலாம். ஆனால் அப்படி இல்லை தற்போது வளர்ந்து வரும் தொழிநுட்ப வளர்ச்சி காரணமாக டிகிரியுடன் செர்த்து பல திறன்கள் இருந்தால் மட்டுமே கைநிறைய சம்பளத்துடன் வேலை செய்ய முடியும்.

அதிக சம்பளம் தரும் திறன்கள்
AI & ML | செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் - ஐடி துறையில், அதிக சம்பளம் பெற்றுத்தரும் துறையாக இருக்கிறது, AI. பிற துறையை சேர்ந்தவர்களை தாண்டி, ஏஐ கருவிகளை உருவாக்கவும அதனை செயல்படுத்தவும் தெரிந்தவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த திறன் பெற்றுள்ளவர்கள், 50-100% சம்பளம் பெறுகிறார்கள்.
Cyber Security | சைபர் பாதுகாப்பு - ஐடி துறையில், தரவு பாதுகப்புக்கு நிபுணர்களின் தேவை எப்போதுமே இருக்கும் இவர்களுக்கான சம்பளமும் இப்போது அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இவர்களுக்கு 30-60 சதவீதம் வரை சம்பள உயர்வு கிடைக்கிறதாம்.

Product Management | தயாரிப்பு மேலாண்மை - வணிகம் மற்றும் தொழில்நுட்பத்தை இணைக்கும் திறனாக இருக்கிறது ப்ராடெக்ட் மேனேஜ்மெண்ட். இந்த திறன் தெரிந்தவர்களுக்கு 40 முதல் 70 சதவீதம் வரை அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறதாம்.
Data Engineering | தரவு பொறியியல் - டேட்டா சயின்ஸ் துறையில் இருப்பவர்களுக்கு எப்போதுமே சம்பளம் அதிகமாகத்தான் இருக்கிறது. இதைத்தாண்டி, தரவு கட்டமைப்புகளை உருவாக்கும் டேட்டா பொறியியலாளர்களுக்கும் இப்போது வேலைவாய்ப்பு களத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த திறன் கொண்டவர்களுக்கும் 2025ல் அதிக சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

SaaS Sales & Growth | விற்பனை மற்றும் வருவாய் செயல்பாடுகள் - நிறுவனத்தின் வருவாயை பெருக்கும் திரனாக இருக்கிறது விற்பனை மற்றும் வருவாய் செயல்பாடுகள். இது, கமிஷன் மற்றும் ஊக்கத்தொகை மூலம் வருமானத்தை இரட்டிப்பாக்குகிறது.
பட்டப்படிப்புகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தற்போது எதையும் செய்ய முடியாது. அதிக சம்பளம் பெற விரும்பினால், திறன்களை வளர்த்துக் கொண்டு வேலையில் முன்னேற்றம் காண வேண்டும்.
உதாரணமாக, 2025‑ல் சில திறன்களை மேம்படுத்திக் கொண்டவர்கள், தங்களது சம்பளத்தை 50% முதல் 100% வரை உயர்த்தியுள்ளனர்.
எனவே, தொழில்நுட்பம் மற்றும் வணிகம் சார்ந்த திறன்களை அதிகமாக வளர்த்துக்கொண்டு, அதற்கேற்ற நிறுவனங்களில் வேலைக்கு சேர்வது சிறந்த வழியாகும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |