இரும்புச்சத்தை அள்ளித்தரும் சுண்டைக்காய் துவையல்... கட்டாயம் எடுத்துக்கோங்க
இரும்புச்சத்து அதிகம் கொண்ட சுண்டைக்காயை துவையலாக செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.
சுண்டைக்காய்
பொதுவாக சுண்டைக்காயில் பல மருத்துவ குணங்கள் காணப்படுகின்றது. ஆனால் இதனை தற்போது சாப்பிடுவதற்கு விரும்புவதில்லை. ஏனெனில் இதில் துவர்ப்பு இருப்பதால் இதனை ஒதுக்கி வைக்கின்றனர்.
சுண்டைக்காய் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், இரும்புச்சத்து, நீரிழிவு, செரிமான பிரச்சனை என அனைத்திற்கும் தீர்வாக இருக்கின்றது.
தற்போது சுண்டைக்காயில் துவையல் செய்வதைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
சுண்டைக்காய் - ஒரு கைப்பிடி
உருட்டு உளுந்து - 1 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
பூண்டு - 4 பல்
சின்ன வெங்காயம் - 20
மிளகாய் வத்தல் - 3
கறிவேப்பிலை - 1 கொத்து
காயப்பொடி - சிறிதளவு
தேங்காய் - ஒரு கைப்பிடி (துருவியது)
புளி - சிறிதளது
உப்பு - தேவையான அளவு

செய்முறை
முதலில் சுண்டைக்காயை நன்றாக கழுவிவிட்டு, உரல் ஒன்றில் போட்டு சிறிது தட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு கடாயில் எண்ணெய் சேர்த்து தட்டி வைத்திருக்கும் சுண்டைக்காயை சிறிது வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
பின்பு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, பூண்டு, சின்னவெங்காயம், மிளகாய் வத்தல், கறிவேப்பிலை என ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்.
அதனுடன் வதக்கிய சுண்டைக்காய், சிறிதளவு காயப்பொடி சேர்த்து வதக்கவும். பின்பு தேங்காய், புளி, உப்பு சேர்த்து கிளறிவிடவும். வதக்கி முடித்த பின்பு மிக்ஸியில் துவையல் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
கடைசியாக கடாயில் கடுகு, கறிவேப்பில் பட்டை வத்தல் சேர்த்து தாளித்து குறித்த துவையலுடன் சேர்த்தால், அசத்தலான சுண்டைக்காய் துவையல் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |