உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்தால் தோலில் காட்டும் அறிகுறிகள் என்ன?
ஒவ்வொரு நாளும் நாம் பல வகையான உணவுகளை உட்கொள்கிறோம். அவ்வாறு நாம் உண்ணும் உணவுகள் ஆரோக்கியத்தை தந்தாலும், அவை பல வகையான நோய்களுடன் தொடர்புபட்டு இருக்கின்றன.
அப்படியான நோய்களில் கொலஸ்ட்ரால் நோயும் ஒன்றாகும். கொலஸ்ட்ராலில் நல்ல கொலஸ்ட்ரால், கெட்ட கொலஸ்ட்ரால் என இரு வகைகள் உள்ளன. உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புகளை HDL கொழுப்பு என்று கூறப்படுகின்றது.
தேவைப்படாத கொழுப்புகளான LDL கொழுப்புகள் இது ரத்த குழாயில் படியும் செயற்பாடு கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும். உடலில் கெட்ட கொழுப்பு அதிகமானால் நமது தோலில் காட்டும் அறிகுறிகள் குறித்து இந்த பதவில் பார்க்கலாம்.
கெட்ட கொழுப்பு தோலின் மாற்றங்கள்
அதிக கொழுப்பு பிரச்சனை இருந்தால், சருமத்தில் சில மாற்றங்கள் காணப்படலாம். இதன் காரணமாக, தோலின் நிறத்தில் மாற்றம் ஏற்படும். இதன் காரணமாக, முகத்தின் நிறம் மஞ்சள் அல்லது வெளிர் கருப்பு நிறமாக மாறலாம். இது மோசமான இரத்த ஓட்டத்தால் ஏற்படுகிறது.
கண்களைச் சுற்றி மஞ்சள் புள்ளிகள்
கெட்ட கொழுப்பு அதிகரிக்கும் போது, கண்களைச் சுற்றி மஞ்சள் நிறப் படலம் உருவாகத் தொடங்குகிறது. இது தோலின் கீழ் கொழுப்பு சேர்வதால் ஏற்படுகிறது. இதனால் கண்களைச் சுற்றி சிறிய பருக்கள் தோன்றக்கூடும்.
சொரியாசிஸ்
உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருக்கும்போது சொரியாசிஸ் பிரச்சனை அதிகரிக்கும். இது சருமத்தை வறண்டதாக்கிறது. இதனால் சருமத்தில் வெடிப்புக்கள் ஏற்படும்.
தோலில் நீலம் அல்லது ஊதா நிற புள்ளிகள்
தோலில் நீலம் அல்லது ஊதா நிறப் புள்ளிகள் தென்பட்டால் அது கெட்ட கொழுப்பின் அடையாளமாக இருக்கலாம். கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் இரத்தம் சரியாக ஓடாத காரணத்தினால் உங்கள் கைகள், கால்கள் அல்லது முகத்தில் நீலம் அல்லது ஊதா நிற புள்ளிகள் அல்லது வலை போன்ற வடிவத்தைக் காட்டும். இதுபோன்ற அறிகுறிகள் காணப்பட்டால் மருத்துவரை நாடுவது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |