ரத்த சர்க்கரை திடீர்னு அதிகமானா கால்களில் என்னென்ன மாதிரியான அறிகுறிகளை வெளிக்காட்டும் தெரியுமா? எச்சரிக்கை
நீரிழிவு வருவதற்கு முன்பு நம்முடைய உடல் எப்படி சில அறிகுறிகளை வெளிப்படுத்துகிறதோ அதேபோல ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போதும் சில வகையான அறிகுறிகளை வெளிப்படுத்தும்.
குறிப்பாக கால்கள் மற்றும் பாதங்களில் சில அறிகுறிகள் வெளிப்படும்.
அவற்றை கவனித்ததும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்..

கால்களில் வெளிப்படும் ஆபத்தான அறிகுறிகள்
- நீரிழிவு நோயாளிகளுக்கு இருக்கும் பொதுவான அறிகுறிகளான கால் வலி, பாத எரிச்சல், போன்றவை நாளடைவில் தீவிரமான பிரச்சினையாக மாறலாம்.
- காலுக்கு அடியில் அதிக அழுத்தப் புள்ளிகள் இருப்பதால் கவனமான இருக்க வேண்டும்.
- சிலருக்கு சிறிய தடிப்பு போல இருக்கும். கால் ஆணியாக மாறிவிடும்.
- அதனால் பாதங்களில் சின்ன பிரச்சினை இருந்தாலும் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
- கால் சருமங்களில் அதிகப்படியான வறட்சி, வெடிப்புகள், குதிகால் வெடிப்பு, தோலுரிதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவது ஆபத்தானது.
- கால்களில் உள்ள திசுக்களின் சிதைவு அல்லது கேங்க்ரீன் போன்ற காயங்களால் கால்கள் துண்டிக்கப்படக் கூடிய ஆபத்தை கூட உண்டாக்கலாம்.
- பாதங்களில் வடிவமைப்புகளில் மாற்றங்கள் உண்டாவது, கௌட் போன்று இருப்பதும் சர்க்கரை நோயாளிகளுக்கு அதிக ஆபத்து தான்.
- கால்களுக்கு அடியில், பாதங்களில் மற்றும் பெருவிரல்களில் ஏற்படும் காயங்கள் சில சமயங்களில் வலியே இல்லாமல் கூட இருக்கலாம். அதனால அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது. உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும்.
- பொதுவாக கால்களில் இரத்த ஓட்டம் தடைபடுவதால் காயம் ஆறுவதில் சிரமம் மற்றும் தொற்றுக்கு எதிர்ப்பு பண்பு குறைதல் ஆகியவை உண்டாகக் கூடும்.
- இரத்த நாளங்கள் குறுகலாகவும் கடினமாகவும் மாறும். இரத்தம் சரியான திசையில் செல்லாது.

ஆபத்தை எப்படி குறைக்கலாம்?
உங்களுடைய நீரிழிவு பிரச்சினைக்கான மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதேபோல தினமும் சரியான நேரத்தில் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
உங்களுடைய கால்களின் மேல் எப்போதும் கவனமாக இருங்கள். லேசான வெட்டுக் காயம், புண்கள் ஆகியவை உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
ஒருவேளை அப்படி ஏதாவது இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
தினமும் குளித்ததும் கால்களை நன்கு ஈரமில்லாமல் சுத்தமாகத் துடைத்து, வாசனை திரவியங்கள் சேர்க்காத மாய்ச்சரைஸர் அல்லது ஜெல்லை அப்ளை செய்யுங்கள்.

ஆனால் விரல்களுக்கு இடையில் இடுக்குகளில் எதுவும் அப்ளை செய்யாதீர்கள்.
ஒருவேளை கால்களை நனைத்து வைத்திருக்க வேண்டுமென்றால் வெதுவெதுப்பான நீரில் மட்டுமே கால்களை நனைத்து வைத்திருக்க வேண்டும். புகைப்பிடித்தலை நிறுத்த வேண்டும்.
கால்களில் காயங்கள் ஏதாவது ஏற்படும் வகையிலான செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக வெறும் கால்களில் நடப்பது, அழுக்கு மற்றும் மண் நிறைந்த பகுதிகளில் சென்று ஏதாவது வேலை செய்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
நகங்களை எப்போதும் சீராக வெட்டி சுத்தமாக வைத்திருங்கள்.
முக்கிய குறிப்பு
ரத்த சர்க்கரை அதிகரிக்கும் போது நீங்களாகவே மருத்துவம் பார்ப்பதை நிறுத்திவிட்டு மருத்துவ ஆலோசனைகளை பெறுவது சிறந்தது. அதே சமயம் கால்களில் ஆபத்து ஏற்படுவதை குறைக்க சுத்தம் மிகவும் அவசியம்.