ஒருபோதும் இந்த அறிகுறிகளை அசால்ட்டா நினைக்காதீங்க- மரணத்தை ஏற்படுத்தும்
தற்போது இருக்கும் அவசர வாழ்க்கை முறையால் மன அழுத்தம் மற்றும் இரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்த இரத்த அழுத்த பிரச்சனைகள் இரண்டு வகைகள் வரும்.
அதாவது, உயர் இரத்த அழுத்த பிரச்சனையானது ஒரு சைலண்ட் கில்லர் என்று பலரும் கூறுவார்கள்.
உடலில் உள்ளிருந்து மரணத்தை உண்டு பண்ணக் கூடியது.
ரத்த அழுத்த பிரச்சினையின் அறிகுறிகள் ஆரம்பக்காலங்களில் வெளியில் தெரியாது. மாறாக காலங்கள் செல்ல செல்ல பக்கவிளைவுகள் அதிகமாக இருக்கும்.
அந்த வகையில் உயர் ரத்தம் பிரச்சினையுள்ளவர்கள் அனுபவிக்கும் அறிகுறிகள் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
உயர் ரத்தம் பிரச்சினையின் அறிகுறிகள்
1. காலையில் எழுந்தவுடன் சிலருக்கு பார்வை சற்று குறைவாக இருக்கும். இதற்கான முக்கிய காரணம், உயர் இரத்த அழுத்தம் காரணமாக கண்களுக்கு செல்லும் இரத்தக்குழாய்கள் மெதுவாக சேதமடையத் தொடங்கி, பார்வை மங்கலடைய ஆரம்பிக்கும். இதுவே உங்களுக்கு திடீரென கண் தெரியாமல் போவதற்கான காரணமாகும். இப்படியொரு நிலை இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
2. உயர் இரத்த அழுத்தம் இருந்தால் மூக்கில் ரத்தக் கசிவு இருக்கும். நீண்ட காலமாக உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பவருக்கு இந்த பிரச்சினை ஏற்படும். இருந்த போதிலும் மூக்கில் உள்ள சிறிய இரத்தக்குழாய்கள் எளிதில் உடைந்து, இரத்தக்கசிவு ஏற்படும்.
3. இரவு முழுவதும் நன்றாக தூங்கி விட்டு காலையில் எழுந்தவுடன் மிகுந்த தாகம் இருக்கும். இப்படி இருப்பவ்கள் உடனடியாக மருத்துவரிடம் சென்று இரத்த அழுத்தத்தை பரிசோதிக்க வேண்டும். இது போன்ற அறிகுறிகள் இருந்தால் உணவில் உப்பை குறைத்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் ரத்தப் பாய்ச்சலில் சிரமம் ஏற்படும்.
4. சிலருக்கு காலையில் எழுந்தவுடன் வாந்தி அல்லது குமட்டல் உணர்வு இருக்கும். இப்படி ஏற்படும் போது பதற்றம், சோர்வு ஏற்படும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது தான் இப்படியான மாற்றங்கள் ஏற்படும் என ஆய்வுகள் கூறுகின்றன.
5. வழமைக்கு மாறாக உங்கள் உடல் சோர்வாக இருந்தால் அதுவும் உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறியாக பார்க்கபடுகின்றது. ஏனெனில் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் போது சிறுநீரகங்களில் உள்ள சிறிய இரத்தக்குழாய்களை சேதமடையும். அப்போது சிறுநீரக நோய் மற்றும் சிறுநீரகங்களில் நச்சுக்கள் அதிகம் குவிந்து,உடல் சோர்வு ஏற்படும். இதன் விளைவாக வீங்கிய கணுக்கால், கால்கள், கைகள், சரும அரிப்பு போன்ற அறிகுறிகளையும் உண்டாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |