கொலஸ்ட்ராலால் ஏற்படும் மாரடைப்பு... தப்பிக்க வழி என்ன?
உடம்பில் கொலஸ்ட்ரால் அதிகரித்துவிட்டால் இதய பிரச்சினை ஏற்பட அதிகமான வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் மூலிகை நீர் மூலம் உடம்பில் சேரும் கொழுப்பை எவ்வாறு கரைப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஆபத்தை ஏற்படுத்தும் கொலஸ்ட்ரால்
நமது உடம்பில் உள்ள மெழுகு போன்ற பொருளே கொலஸ்ட்ரால் ஆகும். இவை கல்லீரலிலிருந்து உற்பத்தி செய்யப்படும் நிலையில், இரண்டு வகையான கொலஸ்ட்ரால் இருக்கின்றது.
அதாவது நல்ல கொலஸ்ட்ரால், கெட்ட கொலஸ்ட்ரால் என இரண்டு வகையாக உள்ளது. உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்தால், பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது.
மாரடைப்பு நோய் ஆரம்பித்து பக்கவாதம் என பல நோய்கள் ஏற்படுகின்றது. ஆதலால் கெட்ட கொழுப்பை நிச்சயம் நீங்கள் சேராமல் தவிர்க்க வேண்டும். இதற்கு சில மூலிகை நீர் அதிக உதவியை செய்கின்றது.
கொலஸ்ட்ராலை கரைக்கும் மூலிகை நீர்
பதிமுகம் என்பது கேரளாவில் பயன்படுத்தப்படும் ஒருவகையான மூலிகையாகும். இவை பதிமுகம் அல்லது சாயமரத்தின் பட்டையை குடிநீரில் சேர்த்து அருந்துவது பதிமுகம் குடிநீர் என்று கூறப்படுகின்றது. இவற்றினை குடித்தால் கொலஸ்ட்ரால் கட்டுப்படுவதுடன், டையூரிடிக் பண்புகளையும் கொண்டுள்ளது.
இரண்டு லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் கால் தேக்கரண்டி பதிமுகம் மற்றும் 1 அங்குல இஞ்சி இவற்றினை சேர்த்து 15 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். பின்பு ஆறவைத்த நீரை மண் பானையில் வைத்து தவறாமல் தொடர்ந்து குடித்தால் கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டில் இருக்கும்.
கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதில் மஞ்சளும் அதிக உதவி செய்கின்றது. 1 லிட்டர் தண்ணீரில் ஆர்கானிக் மஞ்சள் தூள் அரை கரண்டி சேர்த்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் சற்று வற்றியதுடன் இறக்கி ஆற வைக்கவும். பின்பு தொடர்ந்து இந்த நீரை பருகி வந்தால் கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருக்கும்.
இதே போன்று மருத மரத்தின் பட்டையும் கொலஸ்ட்ராலை கரைக்கும். இரண்டு டீஸ்பூன் மருத மரத்தின் பட்டை எடுத்துக்கொண்டு, அதனை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு சுமார் 8 முதல் 9 மணிநேரம் அப்படியே வைக்கவும். பின்பு தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்சில் குடித்து வந்தால் கொலஸ்ட்ரால் நிச்சயம் கரையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |