இறந்த துணை கோழியை மீட்க நடந்த போராட்டம்: காண்பவர்களை கண்ணீரில் ஆழ்த்திய காட்சி
சேவல் ஒன்று தன்னுடைய துணை கோழி இறந்துவிட்ட நிலையில் அதனை காப்பாற்ற நடத்திய போராட்டம் காண்பவர்களின் கண்களை கலங்கவைத்துள்ளது.
உலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவராசிகளும் பாசம் என்ற ஒரு பந்தத்தினுள் தான் இருக்கின்றது. ஐந்தறிவு படைத்த ஜீவன்களின் பாசத்தினை நாம் அவ்வப்போது காணொளியாக அவதானித்து வருகின்றோம்.
இங்கு சேவல் ஒன்று தன்னுடைய துணை கோழி இறந்துவிட்ட நிலையில் அதனை காப்பாற்ற பல முயற்சிகளை செய்துள்ளது. பின்பு அந்த கோழியினை புதைக்க விடாமல் தனது காலால் தடுத்து, பின்பு துணையை புதைத்த இடத்திலேயே சோகத்தில் படுத்துக்கொண்டுள்ளது.
உலகில் பிறந்த ஆறறிவு மனிதர்கள் மட்டுமின்றி ஐந்தறிவு ஜீவன்களுக்கும் காதல் என்ற ஒன்று உள்ளது என்பதையும் உண்மையான காதல் என்றால் என்ன என்பதையும் காணொளியில் காணலாம்.