உடம்பில் இரத்தம் சேர வேண்டுமா? இதோ சூப்பரான 3 ரெசிபி
ஒரு மனிதனுக்கு ஹீமோகுளோபின் மிக மிக அவசியம். இந்த ஹீமோகுளோபின் ரத்த சிவப்பணுக்களில் புரதமாக காணப்படுகிறது. இந்த ஹீமோகுளோபின்தான் மற்ற உறுப்புகளக்கு ஆக்சிஜனை கொண்டு செல்கிறது.
ரத்த சிவப்பணுக்களில் ஏதோனும் குறைபாடு ஏற்பட்டால் பிரச்சினை விளைவித்துவிடும். இரத்தசோகை, சோர்பு, தலைசுற்றல், இதய பாதிப்புகள் ஏற்பட்டு விடும். கவலை வேண்டாம். உங்கள் உடம்பில் இரத்தம் ஊற, ஹீமோகுளோபின் அதிகரிக்க இந்த 3 ரெசிபிக்களை ட்ரை பண்ணுங்க போதும்.
பீட்ரூட் பச்சடி
தேவையான பொருட்கள்
பீட்ரூட் - 4 டேபிள் ஸ்பூன்
தயிர் - 8 டேபிள் ஸ்பூன் புதினா இலைகள் 8 கல் உப்பு - 2 சிட்டிகை மிளகு பொடி - 2 சிட்டிகை சப்ஜா விதை - 2 டீஸ்பூன் (ஊறவைத்தது )
செய்முறை முதலில் பீட்ரூட்டை துருவிக்கொள்ள வேண்டும். பின்னர், தயிரை நன்றாக அடித்து, அதில் துருவிய பீட்ரூட்டை சேர்த்து, நறுக்கிய புதினா, தேவையான உப்பு, ஊறவைத்த சப்ஜா விதைகளை சேர்த்தால் சூப்பரான பிட்ரூட் பச்சடி ரெடி.
இளநீர் பானம்
தேவையான பொருட்கள்
சாலியா விதை - 1 டீஸ்பூன்
சப்ஜா விதை - 1 டீஸ்பூன்
இளநீர் - 1
செய்முறை
முதலில் சாலியா மற்றும் சப்ஜா விதைகளை ஊற வைக்க வேண்டும். பின்னர், இந்த ஊறவைத்த சாலியா மற்றும் சப்ஜா விதைகளை இளநீருடன் சேர்த்து குடித்து வந்தால் உங்கள் உடம்பில் ரத்தம் சேரும்.
இரும்பு சத்து பானம்
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் - 1
கொத்தமல்லி இலைகள் 8
தண்ணீர் - 100 மில்லி
முருங்கைப்பொடி - 1 சிட்டிகை
கல் உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் நெல்லிக்காயையும், கொத்தமல்லியையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், முருங்கை இலை பொடி மற்றும் தேவையன உப்பு சேர்த்து குடித்து வந்தால் உங்கள் உடம்பில் ரத்தம் சேரும். இரத்த சோகையால் அவதிப்படுபவர்கள் நிபுணர் பரிந்துரை செய்துள்ள இந்த 3 ரெசிபிகளையும் நிச்சயம் முயற்சி செய்யலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |