அடர்த்தியான தலைமுடி வேண்டுமா? இந்த ஐந்து பொருள் போதும்
முடி கொட்டுதல் ஒரு சாதாரண விஷயமாக இருந்தாலும் இந்த பிரச்சனை அதிகமாக காணப்பட்டால் அது பல பிரச்சனைக்கு வழி வகுக்கும்.
தலையில் உள்ள முடி கொட்டாமல் அடர்த்தியாக இருப்பதற்கு வீட்டில் இருக்கக்க்கூடிய பொர்ட்களை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தலைமுடி
நாம் வைட்டமின் B நிறைந்த உணவுகளை சாப்பிடும்போது, முடிவளர்ச்சி அதிகமாகிறது. வைட்டமின் E நிறைந்த உணவை எடுத்துக்கொள்ளும், ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து, முடி உதிர்தலையும் கட்டுப்படுத்துகிறது.
இதை தவிர ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களும் தேவைப்படுகின்றன. முருங்கைகீரையை ஒரு கப் தண்ணீர் சேர்த்து அதை வடிகட்டி அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து அதை காலையில் வெறுவயிறறில் குடித்’த வந்தால் முடி நன்கு வலுவடையும்.
தினமும் பசலை கீரை யூஸ் தயாரித்து குடிக்கலாம். இதில் பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் C, கரோட்டினாய்டுகள், தாமிரம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
வெள்ளரிக்காய், கேரட் போன்றவற்றிலும் ஜூஸ் தயாரித்து, எலுமிச்சையை கலந்து குடிக்கலாம். இதிலுள்ள வைட்டமின் A. முடி வேகமாக வளர செய்து, முடியை வலுவானதாகவும், ஆரோக்கியமானதாகவும் மாற்றுகிறது.
இவற்றை எல்லாம் தவிர கறிவேப்பிலையை உங்களுக்கு பிடித்த வகையில் நீங்கள் உணவில் சேர்த்து கொள்ளுதல் மிகவும் பயனளிக்கும்.