இந்த அன்னாசியின் விலை 1 லட்ச ரூபாயாம்! அப்படியென்ன சிறப்பு?
பிரேசிலை தாயகமாக கொண்ட அன்னாசியில் வைட்டமின் ஏ,பி,சி சத்துக்கள் அடங்கியுள்ளன.
இதுதவிர ஆன்டி ஆக்சிடன்டுகள், பொட்டாசியம், மக்னீசியம் அதிகம் நிறைந்த அன்னாசியை குளிர்காலங்களில் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.
100 கிராம் அன்னாசிப் பழத்தில்
ஈரப்பதம்- 88 சதவிகிதம்
புரதம்- 0.5 சதவிகிதம்
மாவுச்சத்து- 10.8 சதவிகிதம்
கொழுப்பு- 17 சதவிகிதம்
தொண்டை தொடர்பான பிரச்சனைகள், ஒற்றைத்தலைவலி, ஞாபக சக்தி அதிகரிக்க, மஞ்சள் காமாலையை குணப்படுத்த, ரத்தச்சோகையை சரிசெய்ய என பலவிதமான நன்மைகளை அளிக்கவல்லது அன்னாசி.
இவ்வாறு பல நன்மைகளை தன்னகத்தே கொண்ட அன்னாசியில் உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த ஹெலிகான் அன்னாசி பழம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
இதன் ஒன்றின் விலை மட்டும் 1000 பவுண்டுகளாம், அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி 1 லட்ச ரூபாய்.
1819ம் ஆண்டு இங்கிலாந்துக்கு கொண்டு வரப்பட்ட ஹெலிகான் அன்னாசி வளர்வதற்குஏற்ப சூழலை உருவாக்கியுள்ளனர் வல்லுநனர்கள்.
இதற்கான செலவுகளும் அதிகம் என்பதால் விலை இவ்வளவு அதிகம் என கூறப்படுகிறது. இதை ஏலத்தில் விட்டால் விலை மேலும் அதிகரிக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.
விக்டோரியன் க்ரீன்ஹவுசில் விளைவிக்கப்பட்ட இரண்டாவது ஹெலிகான் அன்னாசியை மறைந்த இரண்டாம் ராணி எலிசபெத்துக்கு பரிசாக வழங்கப்பட்டதாக ஹெலிகான் பேச்சாளர் பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.