ரத்தசோகையை தடுக்கும் ராகி வெஜிடபிள் சூப்: ருசியாக செய்வது எப்படி?
கேழ்வரகில் மற்ற தானியங்கள், அரிசி போன்றவற்றைவிட அதிக அளவில் கால்சியம் சத்து உள்ளது.
இது நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
கேழ்வரகில் இயற்கையாகவே இரும்புச்சத்து உள்ளது. இதனால் இதனை அதிகம் உண்பது, இரத்த சோகை நோயை குணப்படுத்த உதவுகிறது.
கேழ்வரகு உட்கொள்வது இயற்கையாகவே உடலை ஓய்வு பெற செய்யும், கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.
ரத்தச்சோகை உள்ளவர்கள், ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு இது அற்புதமான மருந்து.
செரிமானத்துக்கு உதவும்.
பாலூட்டும் தாய்மார்கள் இதைக் சாப்பிட்டு வந்தால், பால் சுரப்பு அதிகரிக்கும்.
இதை வைத்து சுவையான வெஜிடபிள் சூப் செய்வது எப்படி என பார்க்கலாம், காலை அல்லது இரவு உணவாக இதை எடுத்துக்கொண்டால் ஏராளமான நன்மைகளை பெறலாம்.
தேவையான பொருட்கள்
ராகி மாவு - 2 டீஸ்பூன்
கேரட், கோஸ், பீன்ஸ், பருப்பு - 1 கப்
உப்பு - சுவைக்கு
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
செய்முறை
காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும். ராகி மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து அதில் கரைத்து வைத்துள்ள ராகி மாவை போட்டு கட்டி விழாமல் நன்றாக கிளறிக்கொண்டே இருக்கவும்.
ராகி முக்கால் பாகம் வெந்தவுடன் அதில் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளைபோட்டு வேக வைக்கவும்.
கடைசியாக உப்பு, மிளகு தூள் தூவி இறக்கினால் சுவையான ராகி வெஜிடபிள் சூப் தயார்!!!