நெஞ்செரிச்சலை அலட்சியப்படுத்த வேண்டாம்... வராமல் தடுப்பது எப்படி?
இன்றைய காலத்தில் பலருக்கும் நெஞ்செரிச்சல் தொல்லை அதிகமாகவே ஏற்படுகின்றது. இதனை எவ்வாறு தடுக்க வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
ஆபத்தான நெஞ்செரிச்சல்
நாம் சாப்பிடும் உணவு உமிழ் நீருடன் கலந்து செரிமான முடிந்ததும் இரைப்பைக்கு கொண்டு செல்கின்றது. அவ்வாறு இரைப்பைக்குள் உள்ள கதவு மிலத்தை உள்ளே நுழைய விடாமல் எல்லைக்கோடு போன்று தடுக்கின்றது.
ஆனால் உணவுக்குழாயின் தசைகள் நாம் சாப்பிடும் குளிர்ச்சியான, காரமான, சூடான பொருட்களை தாங்கும் சக்தி இருக்கின்றது. ஆனால் அமிலத்தன்மையை தாங்கும் சக்தி கிடையாது.
சாப்பிட்டவுடன் வலது பக்கமாக படுத்தால் இடுப்பை சுற்றி இருக்கும் குடல் இரைப்பையை அழுத்தும் போது உணவும் அமிலமும் சேர்ந்து உணவுக்குழாய்க்கு வந்துவிடுவதால் நெஞ்செரிச்சல் ஏற்படுகின்றது.
இதனால் தான் இரவு நேரத்தில் எண்ணெய்யில் பொரித்த உணவுகள், மசாலா அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிடக்கூடாது என்று கூறப்படுகின்றது. அவ்வாறு சாப்பிட்டாலும் உடனே படுத்துவிடுவதால் நெஞ்செரிச்சல் ஏற்படுகின்றது.
சாப்பிட்ட இரண்டு மணி நேரம் கழித்து தான் படுக்கைக்கு செல்ல வேண்டும். இதனை கடைபிடித்தாலே நெஞ்செரிச்சல் ஏற்படுவதை நிச்சயமாக தடுக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |