இந்த உணவுகளை இதய நோயாளிகள் தயவு செய்து சாப்பிடாதீங்க...
இன்றைய காலத்தில் மக்கள் தங்களது வேலைகளால் ஒரு இடத்தில் அமர்வதற்கு கூட நேரமில்லாமல் பம்பரமாக சுழன்று கொண்டு வருகின்றனர்.
இதனால் உணவில் சரியாக கவனம் எடுத்துக் கொள்ளாமல், அசால்ட்டாக விட்டுவிடுகின்றனர். ஆனால் உணவுப் பழக்க வழக்கங்களில் சிறப்பு கவனம் எடுக்காவிட்டால் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இதில் ஒன்று தான் இதய நோய் ஆகும்.
இதயநோயாளிகள் சாப்பிட கூடாத உணவுகள்
இதயம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து தமனிகளில் அடைப்பு ஏற்படுகின்றது.
இதய நோயாளிகள் ஐஸ்கிரீம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை உடம்பிற்கு தீங்கு விளைவிக்கும்.
சர்க்கரை மற்றும் உப்பு இவற்றினையும் அளவிற்கு அதிகமாக சேர்த்துக் கொள்ளக்கூடாது. இவை சர்க்கரை நோயாளிகளுக்கு பாரிய பிரச்சினையை ஏற்படுத்தும்.
இதய நோயாளிகள் தப்பி தவறிக் கூட வெளி உணவுகளை உண்ணக் கூடாது. இதனால் நீங்கள் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |