இதய நோய் வராமல் இருக்க எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும்?
நாம் தூங்கும் நேரத்தின் படியே இதய நோய்களின் தாக்கம் நமக்கு வராமல் இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதய நோய்
இன்று இதய நோயினால் பாதிக்கப்படுபவர்கள் அதிகமாக இருக்கின்றனர். உணவுமுறை மாற்றம், பரபரப்பான வேலைப்பாடு இவற்றினால் ஏற்படும் மனஅழுத்தம் இவைகள் இதயநோய் வர முக்கிய காரணமாக இருக்கின்றது.
நாம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு குறைந்தபட்சம் 7 முதல் 8 மணிநேரம் கட்டாயம் தூங்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் இதய ஆரோக்கியத்திற்கு அதிக தூக்கம் அவசியம் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. தினமும் ஐந்து மணிநேரம் மட்டுமே தூங்குபவர்கள் வார இறுதியில் இழந்த தூக்கத்தை ஈடுகட்டினாலும் அவர்களின் இதயதுடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் பாதிப்பு அதிகமாக இருப்பதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு நாளும் சரியான நேரம் தூக்கம் இருந்தால், இதய நோய்களை தடுக்க முடியுமாம். தூக்கமின்மையாலும் இதய நோய் இளம் வயதிலேயே ஏற்பட வாய்ப்பும் உள்ளது.
தூக்கமின்மையால் இதய பிரச்சினை
தூக்கமின்னை காரணமாக இரத்த அழுத்தம் உயர்கின்றது. இதனால் தமனி சுவர்களில் ரத்தம் அதிக வேகத்துடன் மோதுவதால் சுவர்களை சேதப்படுத்துவதுடன், ஆக்ஸிஜன் ஓட்டத்தையும் குறைக்கின்றது.
ஆதலால் பெரியவர்கள் குறைந்த பட்சம் 7 முதல் 8 மணிநேரமும், குழந்தைகள் 9 முதல் 13 மணிநேரம் தூங்க வேண்டுமாம்.
அதாவது தூங்கும் போது இரத்த அழுத்தம் குறைவதால், அடிப்படையாக நாம் தூங்க வேண்டிய நேரத்தில் கட்டாயம் தூங்க வேண்டுமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |