மதிய வேளையில் குட்டித் தூக்கம் ஆபத்தா?... கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
நம்மில் பலர் மதிய வேளைகளில் தூங்கும் பழகத்தினை வைத்திருப்போம். ஆனால், இது நல்ல பழக்கம் அல்ல என பலர் நம்மிடம் கூறியிருப்பர். இது உண்மையில் நல்லதா கெட்டதா..? மருத்துவர்கள் கூறுவது என்ன..?
மதிய வேளையில் தூக்கம்:
காலை என்னதான் விழிப்புடன் இருந்தாலும், மதியம் அல்லது இளவெயில் வேளையில் வேலைகளை முடித்து விட்டு அமரும் போது, நமக்கு தூக்கம் தொற்றிக்கொள்வது வழக்கமான ஒன்று.
சிலர் அப்படியே சில மணி நேரம் கண் அயர்வர், ஒரு சிலர் உடல் எடை போட்டு விடுமோ? அல்லது சோம்பேறித்தனம் அதிகமாகி விடுமோ? போன்ற பயத்தினால் தூங்காமல் சமாளிப்பர்.
பகலில் பல மணி நேரம் தூங்கினால் இரவில் தூக்கம் வராமல் விழிப்புடன் இருப்போம். ஒரு சிலர் மதிய தூக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க, ஒரு சிலர் மதிய தூக்கம் நல்லது என்கின்றனர். இதில் எதை நம்பலாம்..?
மதியத்தில் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்:
நாம் சிறுவயதில் இருக்கும் போது, துடிப்புடன் அங்கும் இங்கும் ஓடி ஆடி இரவில் மட்டும் தூங்கி பழகி இருப்போம். இந்த பழக்கம் நாம் வளர வளர மாற்றம் பெறும். அதனால்தான் வயதானவர்கள் கண்டிப்பாக மதிய வேளையில் கண் அயர வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மதியானத்தில், 10-20 நிமிடம் தூங்குவது நல்லது என சிலர் பரிந்துரைக்கின்றனர். இதைத்தாண்டி எவ்வளவு நேரம் தூங்கினாலும் நமக்கு மிகவும் சோர்வாகவும் தூக்க கலக்கமாகவும்தான் இருக்குமாம். மதியம் 1-4 மணிக்குள் ஏதாவது ஒரு சமயத்தில் தூங்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
மதிய வேளை தூக்கத்தினால் ஏற்படும் நன்மைகள்:
மதிய வேளையில் அளவுடன் தூங்குவது நினைவாற்றலை அதிகரிக்கும் என ஒரு சில ஆராய்ச்சியில் கண்டுபிடிக்க பட்டுள்ளது. இந்த தூக்கத்தால், நாம் ஒரு நாளில் நடக்கும் பல விஷயங்களை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியுமாம்.
மதிய தூக்கம் கற்பனை திறன் வளர உதவும் என்கின்றனர் மருத்துவர்கள். கலைஞர்கள், எழுத்தாளர்கள் என கலைத்துறையில் உள்ள பலர் மதிய வேளையில் தூங்குவார்களாம்.