அடிக்கடி இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ மாரடைப்பு அபாயம் நிச்சயம்
மாரடைப்பு இன்றைக்கு மிகவும் சாதரணமாகிவிட்டது. அதே நேரத்தில் மாரடைப்பு குறித்த சரியான புரிதல்களோ அல்லது, உடனடியாக கொடுக்க வேண்டிய முதலுதவி குறித்தோ நம்மில் பலருக்கும் சரியான புரிதல் இருப்பதில்லை.
மார்பில் வலி ஏற்பட்டாலே அது மாரடைப்பு தான் என்று நினைத்துக் கொள்கிறவர்களும் உண்டு. பொதுவாக மாரடைப்பு எந்த வயதினருக்கும் ஏற்படக்கூடும். இது எந்த நேரத்திலும் ஏற்படலாம் என்பதால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம்.
மாரடைப்பு
கடந்த சில ஆண்டுகளில் மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் ஆகியன இதற்கு பிரதான காரணங்களாக திகழ்கின்றது.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடித்து, சரியான உணவை தவறாமல் உட்கொண்டால், மாரடைப்பு என்ற ஆபத்தை பெருமளவு குறைக்க முடியும். இருப்பினும் மாரடைப்பின் முதற்கட்ட அறிகுறிகள் குறித்து அனைவரும் அறிந்திருக்க வேண்டியது அவசியம் இது தொடர்பில் தெளிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த அறிகுறிகள் ...
மாரடைப்பின் ஆரம்ப அறிகுறிகளை புறக்கணிப்பதே நிலைமையை மோசமாக்குகிறது. மாரடைப்பின் ஆரம்ப அறிகுறிகள் ஒருமுறை அல்லது இரண்டு முறை மட்டுமல்லாது பெரும்பாலும் மீண்டும் மீண்டும் உணரப்படுகின்றது.
மாரடைப்பு என்பது ஒரு நாளில் வருவதில்லை, உடல்நிலைகளில் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்கள் தீவிரமாகும் போது தான் இதயம் செயலிழக்கிறது. அந்த மோசமான நிலை வருவதற்கு முன்னதாக உடல் காட்டும் அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் இருந்தால் மாரடைப்பு அபாயத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.
மாரடைப்பு அல்லது இதயம் தொடர்பான வேறு சில நோய்களின் அறிகுறியாகவும் இருக்கும். எனவே, நீண்ட காலமாக சோர்வை உணர்ந்தால் அதனை ஒருபோதும் அலட்சியப்படுத்தக்கூடாது.
தொடர்ந்து சுவாசப் பிரச்சனைகள் ஏற்பட்டால், அது இதயம் தொடர்பான நோய்களால் ஏற்பட்டதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் நீண்ட காலமாக இந்த பிரச்சனைகள் இருந்தால் அது மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கலாம். இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம்.
மூச்சுத் திணறல், சுவாசிப்பதில் சிரமம் அல்லது சுவாசம் தொடர்பான வேறு ஏதேனும் அறிகுறிகள் மீண்டும் மீண்டும் இருந்தால் மருத்துவரை அணுகவேண்டும் இடது பக்கத்தில் வலி ஏற்பட்டால், அது நரம்புகள், தசைகள் அல்லது எலும்புகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
ஆனால் ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் தொடர்ந்து வலி ஏற்படுவது இதயம் தொடர்பான சில நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்.
இத்தகைய அறிகுறிகளை புறக்கணிக்கக்கூடாது. உடலின் இடது பகுதியில், குறிப்பாக மார்பு, கழுத்து, தாடை அல்லது முகத்தின் இடது பக்கம் அல்லது இடது கையில் வலி இருந்தால், இந்த அறிகுறிகள் மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கலாம்.
மாரடைப்புக்கு முன், தலைச்சுற்றல் அல்லது லேசான தலைவலி போன்ற அறிகுறிகள் சிலருக்குக் ஏற்படும். குறிப்பாக இந்த அறிகுறிகள் தொடர்ந்து உணரப்பட்டால், இதய பிரச்சனைக்கான அறிகுறியாக இருக்கலாம்.
நெஞ்சு வலி என்பது மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைமைகள் உட்பட பல்வேறு நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்.
குறிப்பாக அடிக்கடி நெஞ்சு வலி அல்லது மரத்துப்போனால் மருத்துவரை அணுகவும். ஏனென்றால், இந்த அறிகுறிகள் இதயம் தொடர்பான நோய்களின் பிரதான அறிகுறிகளாக காணப்படுகின்றன.
மார்பில் என்ன வலி ஏற்பட்டாலும் அது என்ன மாதிரியான வலி எதனால் ஏற்பட்டது என்பதை மருத்துவரைச் சந்தித்து உறுதி செய்து கொள்ளல் அவசியம்.
சில அறிகுறிகளை வைத்து மட்டும் நீங்களே எதையும் உறுதி செய்து கொள்ள முடியாது.
உடனடியாக மருத்துவ உதவி கிடைக்கவில்லை எனில் அதுவே பெரும் பிரச்சனை ஏற்படுத்திடும் என்பதால் மருத்துவ ஆலோசனை பெறுவதில் தயக்கம் வேண்டாம்.வந்த பின் துன்பமடைவதை விட அதனை வராமல் தடுப்பது தான் மிகவும் புத்திசாலித்தனமானது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |