தினமும் கிரீன் டீ குடிப்பவரா நீங்க? அப்போ இதையெல்லாம் பண்ணாதீங்க
பல விதமான தேநீர் வகைகளில் கிரீன் டீ எனப்படும் பச்சை தேயிலைக்கு முதன்மையான இடம் உள்ளது. பொதுவாக கிரீன் டீ குடிக்க பல காரணங்கள் இருந்தாலும் அனைவரும் அதனை உடல் எடையை குறைப்பதற்காகவே பயன்படுத்துகின்றனர்.
இதில் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது. தினசரி கிரீன் டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் இதன் முழுமையான பலனை பெற எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.
கிரீன் டீ குடிக்கும் போது
உணவு சாப்பிட்ட பிறகு கிரீன் டீயை குடிப்பது செரிமானத்தை எளிதாக்கி கொழுப்பை குறைக்க உதவும் என்று பலரும் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், சாப்பிட்ட பிறகு கிரீன் டீ குடிப்பதால் உணவில் இருக்கும் புரதம் செரிமானம் ஆகாது.
எனவே கிரீன் டீயின் சாப்பிட்ட பின்னர் குடிப்பதை தவிர்த்துக் கொள்வது சிறந்தது. புத்துணர்ச்சி ஊட்டும் தேநீரை பலரும் சுடச்சுட குடிக்க விரும்புவார்கள்.
ஆனால் கிரீன் டீயை பொறுத்தவரை மிதமான சூட்டில் தான் குடிக்க வேண்டும். சூடாக குடிப்பது தொண்டை மற்றும் வயிற்றை பாதிக்கலாம்.
வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிக்க கூடாது பலருக்கும் தினசரி காலை நேரத்தில் ஒரு கப் தேநீர் கண்டிப்பாக இருக்க வேண்டும். சாதாரண டீ குடிப்பதற்கு பதிலாக கிரீன் டீக்கு மாற விரும்புகிறார்கள் காலையில் கிரீன் டீயை குடிக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கலாம்.
ஆனால் வெறும் வயிற்றில் கிரீன் டீயை குடிக்கக் கூடாது. வயிற்றில் இருக்கும் அமிலத்தை அதிகரித்து செரிமானத்தில் பிரச்சைனையை உண்டாக்கும்.
அதுமட்டுமின்றி கிரீன் டீயில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைக்காமல் போகும். கிரீன் டீ குடிக்கும் பலரும் இனிப்புக்காக சர்க்கரைக்கு பதிலாக தேன் சேர்ப்பார்கள். ஆனால் இது முற்றிலும் தவறானது.
தேனை பொதுவாகவே எந்த சூடான பானங்களிலும் சேர்க்கக்கூடாது என்று கூறப்படுவது உண்டு. அதேபோல சூடான க்ரீன் டீயிலும் தேன் சேர்க்கக்கூடாது.
கிரீன் டீ வெதுவெதுப்பான மாறிய பிறகு அல்லது ஆறிய பிறகு தேன் சேர்க்கலாம். மாத்திரை சாப்பிடும் பழக்கம் உடையவர்கள் அல்லது மருந்துகள் எடுத்துக்கொள்பவர்கள் சூடான பானங்கள் உடன் அதை சேர்த்து சாப்பிடுவது பழக்கம் இருக்கிறது.
ஆனால் மருந்துகளில் இருக்கும் ரசாயனங்கள் கிரீன் டீயில் இருக்கும் காம்பவுண்ட்களுடன் கலந்து பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம். எனவே எந்த மருந்து மாத்திரைகளையும் தண்ணீருடன் மட்டும் தான் சாப்பிட வேண்டும்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது கிரீன் டீக்கும் பொருந்தும் கிரீன் டீயை அதிக பட்சம் ஒரு நாளைக்கு 3 – 5 கப்புகளுக்கு மேல் குடிக்க கூடாது.
இது உங்கள் உடலில் ஊட்டச்சத்து கிரகிப்பைக் குறைத்து தலைவலி, படபடப்பு, சோம்பல் ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
கிரீன் டீ இலைகள் அல்லது பேக்குகள் என்று எதுவாக இருந்தாலும் காற்று புகாத உலர்வான டின்களில் சேமித்து வைக்க வேண்டும். அப்போதுதான் அது சுவையாக இருக்கும்.
காலை உணவு உண்ட பிறகு கிரீன் டீ குடிக்கலாம். கிரீன் டீயை தயாரிக்கும் பொழுது மினரல் வாட்டர் அல்லது சுத்திகரிக்கப்பட்ட நீரை பயன்படுத்தவும்.
இரவு தூங்குவதற்கு முன் க்ரீன் டீயை குடிப்பது நல்ல தூக்கத்துக்கு துணைப்புரிவதுடன் முழுமையான பலனை பெற உதவி செய்யும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |