இலங்கையில் திடீரென்று சுருண்டு விழுந்த இளம் பெண் பலி…. நொடியில் உயிரை பறித்தது எது? எச்சரிக்கை… மக்களே!
கடந்த சில நாட்களாகவே இளம் ஆசிரியரின் மரணச் செய்தி இலங்கையர்களை உலுக்கி எடுத்துள்ளது.
ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பு கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ஆசிரியர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்திருந்தார்.
இதற்கான காரணம் வெளியாகியுள்ளது. திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாரடைப்பு என்ற கொடிய நோய் அண்மைக்காலமாக மிகவும் பொதுவானதாகவும், மக்களை அச்சுறுத்துவதாகவும் மாறிவிட்டது.

வயதானவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு வரும் என நினைத்துக்கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது. மிக இளம் வயதினர் கூட மாரைப்பால் சுருண்டு விழுந்து இறந்து வருகின்றனர்.
உண்மையில் இதய நோய்க்கான காரணம் என்ன என்றும் இதில் இருந்து தப்பிப்பது எப்படி என்றும் விரிவாக பார்க்கலாம்.
மாரடைப்பு என்றால் என்ன?
இதய தசைகளுக்கும் தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்துச் செல்ல மூன்று முக்கிய ரத்தக்குழாய்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் இதயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்கின்றன.
இந்த ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு தடையாக முதலில் சிறியதாக தடைக்கற்கள் போல அடைப்புகள் ஏற்படுகின்றன. சில காரணங்களால் இத்தடை கற்கள் பெரிதாகி உடைந்து, அதன்மேல் ரத்தம் உறைந்து ரத்தக்குழாயை முழுமையாக அடைத்து விடுகிறது.

இதனால் இந்த இரத்தக் குளாய் மூலம் ரத்தத்தைப் பெறும் இதயத்தின் தசைப் பகுதி ஆக்ஸிஜனையும் ஊட்டச் சத்துகளும் கிடைக்கப் பெறாததால் செயலிழக்கிறது. இதுவே மாரடைப்பு.
எனவே நாம் சுருக்கமாக புரிந்து கொள்ள வேண்டியது இதைத்தான் மாரடைப்பு என்பது இதயத்தில் உள்ள ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதால் வருவது, அது எந்த இடத்தில் அடைப்பு ஏற்படுகிறது என்பதை பொறுத்து மாரடைப்பின் தன்மையானது மாறுபடும்.
திடீரென மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்
சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை.
உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் ஆபத்து உள்ளவர்களுக்கும் இதய நோய் ஏற்படும்.
புகையிலை, மது, சிகரெட் பழக்கம் உள்ளவர்களுக்கு இதயம் நோய்கள் வருவதற்கு முக்கிய காரணம்.

உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பு
ஒழுங்கற்ற இதயத்துடிப்பு போன்ற பல காரணங்கள் உள்ளன.
இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க
- பரம்பரை இருதய நோய் ஆபத்து இருப்பவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொண்டால் இதய நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.
- ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்த வாரத்துக்கு மூன்று அல்லது 4 முறை மிதமான மற்றும் தீவிரமான உடற்பயிற்சிகளை செய்யலாம். குறைந்தபட்சம் 40 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.
- குடிப்பழக்கம், புகைபிடித்தல், அதிக நேரம் வேலை செய்தல், சரியான நேரத்தில் தூங்காமல் இருப்பது போன்ற ஆரோக்கியமற்ற பழக்கங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதில் ஏதேனும் ஒன்றை பின்பற்றுபவராக இருந்தால் கூட மன அழுத்தம் ஏற்பட்டு இதய நோய் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
- ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற வேண்டும். உப்பு மற்றும் சர்க்கரை பயன்பாட்டை சமச்சீராக பயன்படுத்திக் கொள்வது நல்லது.
- குறிப்பிட்ட கால இடைவெளியில் இதயம் சார்ந்த முழு உடல் பரிசோதனைகளை செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் இதயம் உள்ளிட்ட பாதிப்புகளை முன்கூட்டியே கணித்து முன்னெச்சரிக்கையாக இருக்கலாம்.
- இதய நோய் பாதிப்பு இருப்பவர்கள் மூச்சுத் திணறல் மற்றும் சோர்வு, தலைவலி, மார்பு வலி போன்ற அறிகுறிகள் வந்தால் அலட்சியமாக இருக்கக்கூடாது.
- இவை திடீர் மாரடைப்புக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். இதுகுறித்து மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள்.
வயது வரம்பு இன்றி உயிர்களை பலி வாங்கும் மாரடைப்பு நோய்க்கான மருந்து எம்மிடமே இருக்கின்றது. எமது வாழ்க்கை முறையில் ஏற்படுத்தப்படும் மாற்றத்தில் இருந்து மருத்துவம் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். மக்களே எச்சரிக்கை.... இனியும் இழப்புகளை தடுக்க வில்லை என்றால் இது நம் நாட்டு தேசிய வியாதியாக உருவெடுத்துவிடும்.!