மாரடைப்பால் சுருண்டுவிழுந்த உரிமையாளரை காப்பாற்றிய நாய்க்கு கிடைத்த விருது
மாரடைப்பால் சுருண்டு விழுந்த உரிமையாளரை வளர்ப்பு நாய் ஒன்று குரைத்தே காப்பாற்றிய சம்பவம் ஜப்பானில் நடந்துள்ளது.
உரிமையாளரை காப்பாற்றிய நாய்
ஜப்பான் நாட்டின், சிபா நகரில் உள்ள வகாபா- குவில் எனும் பகுதியில் உள்ள குதிரையேற்ற கிளப்பில் 50 வயது நபர் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்துள்ளார்.
இதனை அருகில் இருந்தவர்கள் கவனிக்காத நிலையில், அங்கிருந்த 5 வயதான குமி என்ற மங்கிரோல் வகையைச் சேர்ந்த நாய் குரைத்தே அனைவரின் கவனத்தினை ஈர்த்து, உரிமையாளரை மருத்துவமனையில் அனுமதிக்க வைத்துள்ளது.
இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்துள்ள நிலையில், குறித்த உரிமையாளர் காப்பாற்றப்பட்டு தற்போது உடல்நலம் தேறியுள்ளார்.
தற்போது 3 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், உரிமையாளரை காப்பாற்றிய குமு நாய்க்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.