30 வயதுக்குப் பிறகு இதயத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்!
இதயம் என்பது மனித உறுப்புக்களில் மிகவும் முக்கியமான ஒன்று.
உடலுக்கு இரத்தத்தை பம்ப் செய்யும் முக்கிய தொழிலை இதயம் செய்கிறது.
ஒரு மனிதனின் ஆரோக்கியத்தில் இதய ஆரோக்கியம் முக்கிய செல்வாக்கு செலுத்துகிறது.
நீரிழிவு, இரத்த அழுத்தம் அதிகரித்தல், புகைபிடித்தல் என்பன இதய நோய்க்கான முக்கிய காரணிகளாகும்.
தற்போது வயது வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் மாரடைப்பு ஏற்படுகின்றது. எனவே இளம் வயது முதலே ஆரோக்கியமான உணவுப் பழக்கம், சிறந்த வாழ்க்கை முறையைக் கடைபிடித்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
இனி 30 வயதை அடைந்தவர்கள் உணவில், வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் எனப் பார்ப்போம்.
ரன்னிங், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்ற செயற்பாடுகள் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
பழங்கள், காய்கறிகள், தானியங்கள், புரதச்சத்து நிறைந்த உணவுகளை சம அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உணவில் உப்பின் வீதத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்.
நிறைவுற்ற கொழுப்பை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அதிக சீனியுள்ள பானங்கள், இறைச்சிகள் என்பவற்றை தவிர்க்க வேண்டும்.
புகைபிடிப்பதை தவிர்க்க வேண்டும்.
சுவாசப் பயிற்சிகள், தியானம் போன்றவற்றில் ஈடுபட வேண்டும்.