வயிற்றுப்புண்ணை எளிதாக சுகமாக்கும் பூசணிக்காய் சூப்
இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் எல்லோரும் துரித உணவுகளின் அடிமைகளாக மாறிவிட்டனர்.
இதனால் உடலில் பல நோய்கள் வருகின்றது. அந்த வகையில் இன்றைய இளம் தலைமுறையினர் பல நோய்களுக்கு உள்ளாகின்றனர்.
இவ்வாறு பல காரணங்களால் தற்போது உள்ள மக்களுக்கு வயிற்றுப்புண் என்பது பெரியளவில் உள்ள பிரச்சனையாக காணப்படுகிறது.
இது காலை உணவை தவிர்ப்பதனாலும் வரும். இதற்கு சரியான ஒரு தீர்வாகத்தான் பூசணிக்காய் சூப் விளங்குகிறது. இந்த சூப் எப்படி செய்யலாம் என்பதை தொடர்ந்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பூசணிக்காய் துண்டுகள் – ஒரு கப்
- வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்
- கொத்தமல்லித்தழை – சிறிதளவு
- பால் – ஒரு டம்ளர்
- மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
- சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
- பூண்டு – 2 பல்
- சின்ன வெங்காயம் – 4
- உப்பு – தேவையான அளவு
செய்யும் முறை
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, கொத்தமல்லியை போட்டு நன்றாக வதக்கவும்.
பின்னர் பூசணிக்காய் துண்டுகள், உப்பு சேர்த்து சிறிது வதக்கிய பின்னர் 4 டம்ளர் தண்ணீர் விட்டு வேகவிட வேண்டும்.
பூசணிக்காய் வெந்ததும் அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வேறாக பூசணிக்காய் வேறாக எடுத்து வைக்கவும்.
பின்னர் பூசணிக்காயை ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து கொள்ளவும். பின்னர் அரைத்த கலவையை வடிகட்டிய தண்ணீரில் கலக்கவும்.
பின்னர் பால், மிளகு, சீரகத்தூள் சேர்த்துக் கலக்கி அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும். இந்த சூப்பை தொடர்ந்து 15 நாட்கள் குடித்து வந்தால் வயிற்றுப்புண் சுகம் கிடைக்கும்.