ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் விதைகள்! இந்த பிரச்சினைக்கு எந்த விதை?
பொதுவாகவே நாம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் சீராக இயங்க வேண்டியது அவசியம்.
அவ்வாறு உடல் உறுப்புகள் சீராக செயல்பட நாம் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வதுடன் உடற்பயிற்சி, தூக்கம் உட்பட பல வாழ்க்கை முறை பழக்கங்களிலும் கவனம் செலுத்த வேண்டியது இன்றியமையாதது.

அந்தவகையில், ஒவ்வொரு உடல் பாகங்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதில் சில விதைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பொதுவாகவே விதைகள் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக பார்க்கப்படுகின்றது.
விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதங்கள், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இதை உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொள்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நாள்பட்ட நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கும், எடை இழப்பு மற்றும் நீரிழிவு போன்ற பல பிரச்சினைகளை விதைகள் குணப்படுத்துகின்றன.
அந்தவகையில், எந்த விதை எந்த உடல் ஆரோக்கிய பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் என இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி பரிந்துரைதுள்ளார் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
சீரகம்

சீரகத்தில் இரும்புச்சத்து, மாங்கனீசு, கால்சியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இது செரிமானத்தை மேம்படுத்தவும், வயிறு உப்புசம் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளைக் குறைக்கவும் பெரிதும் துணைப்புரிகின்றது. மேலும் உடல் எடையை குறைக்க வேண்டும் என போராடி வருபவர்களும் சீரகத்தை ஊறவைத்த தண்ணீரை காலையில் பருகுவது நன்மை பயக்கும்.
சப்ஜா விதைகள்

சப்ஜா நார்ச்சத்தின் நல்ல மூலமாகும். இதில் அதிக அளவு கால்சியம், இரும்பு மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தவும் மலச்சிக்கலைப் போக்கவும் உதவும். சப்ஜா விதைகளை தொடர்ந்து உட்கொள்வது எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிப்பதற்கும் தூக்கத்தை மேம்படுத்துவதற்கும் கூட பெரிதும் துணைப்புரிகின்றன.
எள்

எள்ளைத் தொடர்ந்து உட்கொள்வது எலும்பு ஆரோக்கியத்திற்கும் கல்லீரல் பாதுகாப்பிற்கும் துணைப்புரியம் இது கெட்ட கொழுப்பைக் குறைத்து இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றது.
ஆளி விதைகள்

ஆளி விதைகளில் அதிக அளவு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் லிக்னான்கள் காணப்டுகின்றன. ஆளி விதைகளை தொடர்ந்து சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் கொழுப்பைக் குறைப்பதற்கும் உதவுகின்றது.
பூசணி விதைகள்

பூசணி விதைகள் துத்தநாகம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளின் சிறந்த மூலமாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இது மெக்னீசியம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களிலும் நிறைந்துள்ளது. அது உடலை நாள் முழுவதும் புத்துணர்வுடன் வைத்திருக் துணைப்புரிகின்றது.
வெந்தயம்

ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைக்கவும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் வெந்தயம் பெரிதும் துணைப்புரிகின்றது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும்.வாய்ப்புண் மற்றும் அதிக உடல் சூடு தொடர்பான பிரச்சனைகளுக்கும் வெந்தயம் நல்ல தீர்வு கொடுக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |