உடல் எடை மற்றும் தொப்பையை வேகமாக குறைக்கணுமா? காலையில் இதை மட்டும் செய்திடுங்க
உடல் எடையைக் குறைப்பதற்கு காலையில் நாம் செய்ய வேண்டிய சில பழக்கங்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் உடல் பருமன் என்பது ஒரு பொதுவான பிரச்சினையாக இருக்கிறது. வேகமாக அதிகரித்துவிடும் உடல் எடையைக் குறைப்பது மிகவும் கடினமாகவே இருக்கின்றது. அதிலும் தொப்பை கொழுப்பு அதிகமாகிவிட்டால் அதை எளிதில் கரைக்க முடிவதில்லை.
ஆதலால் உடல் எடையைக் குறைப்பதற்கு பலரும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இதற்காக உடற்பயிற்சி நிலையம் செல்வது, உணவில் கட்டுப்பாடு போன்றவற்றை மேற்கொள்கின்றனர்.
ஆனால் காலை எழுந்தவுடன் சில பழக்கங்களை நாம் வழக்கமாக்கி கொண்டால் உடல் எடையை மிகவும் எளிதாக குறைத்துவிட முடியும்.
காலையில் என்ன செய்ய வேண்டும்?
காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காபி மற்றும் டீ குடிப்பதை தவிர்த்து, அதற்கு பதிலாக இஞ்சி சாறு அல்லது எலுமிச்சை சாறு பானத்தை குடிக்கலாம். இவை நச்சுக்களை நீக்கவும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் செய்கின்றது.
காலையில் உடற்பயிற்சி மேற்கொள்வது ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன், வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்தும். கொழுப்பை வேகமாக எரிக்கவும் உதவுகின்றது.
Image: istock
காலை உணவானது புரதம் நிறைந்த உணவாக இருக்க வேண்டும். அதிக சர்க்கரை உணவினை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அதிய சர்க்கரை உணவுகள் பசியை ஏற்படுத்தி அதிக உணவுகளை உட்கொள்ள வழிவகுக்கின்றது. அதுவே புரதம் நிறைந்த உணவுகள் என்றால் வயிறு நிரம்பிய உணர்வை அளிக்கின்றது.
காலை வேளையில் சூரிய ஒளியை பெறுவது நல்லது. இது வைட்டமின் டி அளவை மேம்படுத்துவதால், 10 முதல் 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் சிறிது தூரம் நடப்பதை வழக்கமாக வைத்துக் கொள்ளலாம்.
காலையில் தியானம் செய்வது மன அழுத்தத்தை குறைக்க உதவும். மன அழுத்தத்தை குறைப்பதுடன், கொழுப்பையும் விரைவாக குறைக்க உதவும். அந்த வகையில் இது எடை இழப்புக்கு உதவியாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |