வீட்டில் முருங்கை இலை இருக்கா? அப்போ இதை போட்டு துவையல் செய்ங்க
வீட்டில் இருக்கும் முருங்கை இலை துவையல் செய்யும் முறை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
முருங்கை இலை துவையல்
காலையில் எழுந்ததும் காலையில் குறைவான நேரத்தில் எதாவது சமைக்க வேண்டும் என்றால் அதற்கு இந்த ரெசிபி மிகவும் பொருத்தமாக இருக்கும்.
இந்த முருங்கை இலையில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது. இதை தினமும் சாப்பிட கிடைக்கவில்லை என்றாலும் என்றாவது ஒரு நாளில் துவையல் செய்து சாப்பிட்டால் நமது உடலில் இருக்கும் பல நோய்களுக்கு இது ஒரு மருந்தாக இருக்கும்.
முருங்கை இலைகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளன.
முருங்கை இலைகளை உட்கொள்வதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும், மேலும் சில நோய்களின் அபாயத்தையும் குறைக்கலாம். எனவே குறைந்த நேரத்தில் முருங்கை இலை துவையல் செய்முறை பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- முருங்கை இலை - ஒரு கப்
- எண்ணெய் - சிறிதளவு
- உளுந்து - 2 டீஸ்பூன்
- பூண்டு - 5 பல்
- பச்சை மிளகாய் - 3
- மிளகாய் வத்தல் - 2
- சின்ன வெங்காயம் - 10
- இஞ்சி - சிறிதளவு
- உப்பு- தேவைக்கு ஏற்ப
- புளி - சிறிதளவு
- கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு
- தேங்காய் துருவல் - அரை கப்
செய்யும் முறை
முருங்கை இலையைக் கொண்டு துவையல் செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
அதனுடன் உளுந்து, பூண்டு, பச்சை மிளகாய், மிளகாய் வத்தல், சின்ன வெங்காயம் போன்றவற்றைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வறுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் இஞ்சி, புளி, கொத்தமல்லி இலை, தேங்காய் துருவல் மற்றும் முருங்கை இலையைச் சேர்த்து ஒரு 5 நிமிடங்களுக்கு வதக்கவும்.
கடைசியாக ஒரு மிக்ஸியை எடுத்து அதில் வறுத்த அனைத்ஜதையும் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படி செய்து எடுத்தால் சுவையான முருங்கை இலை துவையல் தயார்.
இந்த துவையல் சூடான சாதத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
