ஏராள மருத்துவ குணம் கொண்ட புதினா ரசம் இப்படி செய்து பாருங்க!சுவையில் நாக்கு திரழும்
காலநிலை மாறும் போது நமது உடல் நிலையும் மாறும். இதனால் சில நோய்களும் வந்து செல்லும். இதற்கு வீட்டிலேயே ரசம் செய்து குடித்தால் சுகமாக இருக்கும்.இதற்காக புதினாவை வைத்து ரசம் செய்யலாம்.
புதினா இலைகள் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரிமான பிரச்சனைகள் போன்றவற்றை சரிசெய்யும். ஆஸ்துமா, உள் நாக்கு வளர்தல், மூட்டு வலி ஆகியவற்றைக் குணப்படுத்த வல்லது.
புதினா உடற்சூட்டைத் தணிக்க உதவும். இது சமையலின் சுவைக்காக மட்டும் பயன்படுத்தவது இல்லை. இதை மருத்துவ நன்மைக்காகவும் பயன்படுத்துகிறார்கள்.இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட புதினாவை வைத்து வீட்டிலேயே எளிதாக எப்படி சுவையான புதினா ரசம் செய்யலாம் என்று இங்கே தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
- துவரம் பருப்பு - 1/3 கப்
- நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன்
- பழுத்த தக்காளி - 1
- புதினா இலை - 1 கப்
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
- கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன்
- உப்பு - தேவைக்கேற்ப 3/4 தேக்கரண்டி
- தாளிக்க தேவையானவை
- நெய் அல்லது எண்ணெய் - 1 டீஸ்பூன்
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- சீரகம் - 1/2 டீஸ்பூன்
- பெருங்காய பொடி - 1 சிட்டிகை
செய்முறை
முதலில் துவரம் பருப்பை நன்றாக கழுவி குறைந்தது 1 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
பின்னர் குக்கரில் ஊறவைத்த துவரம் பருப்பு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பொடியாக நறுக்கிய புதினா இலைகள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து 1 விசில் விட்டு 7-8 நிமிடம் சிம்மில் வைக்க வேண்டும்.
இதை நன்றாக ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்து அதை நன்றாக வடிகட்டி ரசத்தை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். பின்னர் பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்துக்கொள்ளவும்.
கடுகு வெடித்து வந்ததும் சீரகம் மற்றும் பெருங்காய பொடியை போட்டு தாளித்து கொள்ளவும். இந்த தாளிப்பை அப்படியே ரசத்தில் கொட்டி கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதன் மேல் சிறிதளவு புதினா இலைகளை தூவினால் சுவையான புதினா ரசம் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |