நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? இந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக்கோங்க
மனிதர்கள் சுவாசிப்பதற்கு முக்கியமாக இருக்கும் உடல் உறுப்பான நுரையீரல் ஆரோக்கியமாக இருப்பதற்கு எந்தெந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
நுரையீரல் பிரச்சினை
இன்றைய காலத்தில் நுரையீரல் பிரச்சினை என்பது மிக அதிகமாக வந்து தொல்லை கொடுக்கின்றது. காற்று மாசுபாடு மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் காரணமாக ஆஸ்துமா மற்றும் சுவாச கோளாறு அதிகரிக்கின்றது.
சுவாசத்தின் ஆதாரமாக இருக்கும் நுரையீரல் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் பிளவனாய்டு மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுகள் தேவைப்படுகின்றது.
நுரையீரலை பாதுகாக்கும் உணவுகள்
குர்குமின் நிறைந்த மஞ்சளில் வீக்கத்தை போக்குவதுடன், ஆண்டி ஆக்சிடென்ட் பண்பும் இதில் இருப்பதால் நுரையீரலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றது.
நுரையீரலில் சிக்கி கொள்ளும் கார்பன் துகள்களை மாற்றும் தன்மை வெல்லத்திற்கு இருப்பதால், இவை நச்சுக்களையும், அழுக்கையும் நுரையீரலில் நீக்குகின்றது.
மேலும் பாதாம், வாதுமை பருப்பும் நுரையீரல் திறன்பட செயல்படுவதற்கு உதவுகின்றது. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன் உணவுகள் நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கின்றது.
பூண்டு, பச்சை இலை காய்கறிகள், கீரைகள், பழங்களில் எலுமிச்சை, ஆரஞ்ச் என காணப்படும் பொருட்கள் நுரையீரலை வலுப்படுத்துவதற்கு உதவி செய்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |