ஆட்டு நுரையீரல் நல்லது.. ஏன் தெரியுமா? ருசியான வதக்கல் செய்வது எப்படி?
ஆட்டு இறைச்சியை விட அதன் உறுப்புகளில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன.
ஈரல், குடல், தலை, கால் என அனைத்திலும் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன.
இந்நிலையில் ஆட்டு நுரையீரல் சாப்பிடுவதல் உடலின் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்படுகிறது.
நமது நுரையீரலுக்கும் வலுவை தருவதுடன் மூச்சுத் திணறல், ஆஸ்துமா போன்ற பிரச்சனை இருப்பவர்களுக்கு பயனை அளிக்கும்.
இதனை வைத்து சுவையான வதக்கல் எப்படி செய்து என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நுரையீரல் - கால் கிலோ
வெங்காயம், தக்காளி - தலா 3
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா- 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஆட்டு நுரையீரலை நன்றாக சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அடுத்ததாக அடுப்பில் குக்கரை வைத்து, எண்ணெய் ஊற்றியதும் சோம்பு, பட்டை போட்டு தாளிக்கவும்.
தொடர்ந்து நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும், ஓரளவு வதங்கிய பின்னர் இஞ்சி- பூண்டு பேஸ்ட் சேர்த்து, தக்காளி சேர்க்கவும்.
அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து லேசாக வதக்கிய பின்னர், நுரையீரல் சேர்க்கவும்.
இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
மூன்றிலிருந்து நான்கு விசில் வந்ததும், நன்றாக பிரட்டி எடுத்து கொத்தமல்லி சேர்த்தால் சுவையான வதக்கல் தயார்!!!