Weight Loss: நிறைய சாப்பிட்டாலும் உடல் எடையை அதிகரிக்க கூடாதா? இதை செய்தால் போதும்
கடினமாக கஷ்டபட்டு உடல் எடை குறைப்பதற்காக பாடுபடுபவர்களுக்கு உடல் எடை குறையவே குறையாது. அவர்கள் உடற்பயிற்சி செய்வார்கள், டயட்டில் இருப்பார்கள், ஆனால் எடையை குறைப்பது அவ்வளவு சுலபம் இல்லை.
ஆனால் சிலருக்கு காரணம் எதுவும் இல்லாமல் உடல் எடை தானாக குறைவடையும், ஆனால் இதற்கான காரணம் யாருக்கும் தெரிவதில்லை. ஆரோக்கியமான முறையில் உடல் எடை குறைப்பது நல்லது, ஆனால் எந்த காரணமும் இல்லாமல் ஆரோக்கியமற்ற எடை இழப்பு ஏன் ஏற்படுகிறது.
இது நோய்களின் அறிகுறியா இல்லையா என்பது பலருக்கு தெரியாது. இவ்வாறான நிலைமையின் போது இதற்கான காரணத்தை கண்டுபிடித்தால் அதற்கான பதில் எளிதில் கிடைக்கும். வேகமாக உடல் எடை குறைப்பதற்கு என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
எடை குறைப்பு
அதிக வளர்சிதை மாற்றம் கொண்டவர்களுக்கு உடல் எடை அதிகரிக்காது. அதிக வளர்சிதை மாற்றம் கொண்ட நபர்கள் தினமும் இவர்களின் அடிப்படைப் பழக்கம் உடற்பயிற்சியாக வைத்துள்ளனர். அந்த வகையில் பொதுவாக கார்டியோ பயிற்சிகள், வலிமை பயிற்சி மற்றும் தசை பயிற்சிகள் ஆகியவற்றில் ஈடுபடுகிறார்கள்.
இதை தவிர ஓட்டம் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற பழக்கத்தை பழக்கபடுத்தி கொள்கின்றனர். இதனால் இதயத் துடிப்பு மற்றும் கலோரி எரிப்பை அதிகரிக்கின்றன. இந்த காரணம் தான் இவர்களுக்கு அதிக வளர்சிதை மாற்றத்தை கொடுக்கிறது.
இவர்கள் அதிகமாக அல்லது குறைவாக அடிக்கடி சாப்பிடுவதற்குப் பதிலாக, நாள் முழுவதும் குறைவான, சீரான உணவை சாப்பிடுகிறார்கள்.
உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க நினைப்பவர்கள் 3 முதல் 4 மணிநேர இடைவெளியில் சாப்பிடுவது உங்களின் வளர்சிதை மாற்றத்தை பராமரிக்கிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவுகளில் குறிப்பிடத்தக்க அளவு ஏற்ற இறக்கங்களை தடுக்கிறது.
நாள் முழுவதும் நிலையான ஆற்றல் மற்றும் பசியின்மையுடன் இருக்க உதவுகிறது. அதிக வளர்சிதை மாற்றம் கொண்ட நபர்கள், சரியான நீரேற்றத்துடன் இருப்பார்கள். காரணம் செரிமானம், ஊட்டச்சத்து உறிஞ்சுதல் மற்றும் அதிக வெப்பநிலை கட்டுப்பாடு போன்றவற்றிற்கு நீர் முக்கியமானது. போதிய அளவு நீரை குடிக்கும் பழக்கத்தை மேம்படுத்தி கொள்வது அவசியம்.
எப்போதும் நீரேற்றமாக இருப்பது ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு முக்கியமானதாகும். உயர் வளர்சிதை மாற்றம் கொண்ட நபர்கள், தங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கவும் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்கவும், நல்ல தரமான தூக்கத்தை பின்பற்றுகிறார்கள். குறைந்தது எட்டு மணிநேரம் உறங்கும் பழக்கத்தை வைத்துள்ளனர்.
இந்த பழக்கத்தின் மூலம் பசியின்மை மற்றும் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கும் ஹார்மோன்களை ஒழுங்குப்படுத்துகிறது. உங்களிடம் நாள்பட்ட மன அழுத்தம் கார்டிசோல் அளவை அதிகரித்தால் உங்களின் வளர்சிதை மாற்றத்தை இது மோசமாக பாதிக்கும். இது பசி மற்றும் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
எனவே அதிக வளர்சிதை மாற்றம் கொண்ட நபர்கள், தியானம், யோகா அல்லது ஆழ்ந்த மூச்சுப் பயிற்சிகள் போன்ற மன அழுத்தத்தைக் குறைக்கும் பயிற்சிகளில் ஈடுபடுவார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |