சைவ உணவு பிரியரா நீங்கள்? எலும்புகளை வலுப்படுத்த இந்த உணவை எடுத்துக்கோங்க
அசைவ உணவுகளை எடுத்துக்கொண்டால் தான் எலும்பு வலுவாகும் என்று நினைப்பவர்களுக்கு, சைவ உணவை எடுத்துக் கொள்பவர் எலும்பை வலுவாக வைத்துக்கொள்ள உதவும் உணவுகளை குறித்து இங்கு பார்க்கலாம்.
சைவ பிரியர்கள் எலும்புகளை வலுவாக்க என்ன செய்யலாம்?
எலும்புகளை வலுவாக்க நினைப்பவர்கள் பாதாமை பாலுடனோ அல்லது வேர்க்கடலை போன்று சாப்பிடலாம். அதிலும் ஊற வைத்து சாப்பிட்டால் பயன் அதிகமாக இருக்கும்.
நீங்கள் பால் போன்ற பொருட்களை சாப்பிட விரும்பவில்லை என்றால், முழு தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளவும். இவற்றில் கால்சியம் மட்டுமின்றி வைட்டமின் டி கிடைப்பதால் எலும்புகள் வலிமையாக இருக்கும்.
மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்களை கொண்ட பீன்ஸை உணவில் சேர்த்துக் கொண்டால் எலும்புகள் வலுப்படும்.
கொட்டைகள், உலர் பழங்களில் எலும்புகளை வலுவாக்கும் கால்சியம் ஓரளவு இருப்பதால் அதனை தினமும் ஒரு கைப்பிடி எடுத்துக் கொள்வது நல்லது.
இதே போன்று பூசணி விதைகள், சியா விதைகள், சுரைக்காய் விதைகள் இவற்றினை எடுத்துக்கொண்டால் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சி மேம்படும்.
பச்சை காய்கறிகள், பச்சை இலை காய்கறிகள் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
அதிகமான கொழுப்பு இல்லாத பால் பொருட்களை சேர்த்துக் கொள்ளவும். ஏனெனில் பாலில் கால்சியம் சத்து காணப்படுவதால் எலும்பை வலுவாக வைத்திருக்கும்.
பால், தயிர், பனீர் போன்ற உணவுகளில் அதிக கால்சியம் காணப்படுவதால் எலும்புகளின் ஆரோக்கியத்திறகு முக்கியமாக இருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |
