ஆண்கள் ஆட்டு எலும்பு சூப் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? இனி தெரிஞ்சிட்டு செஞ்சி குடிங்க...!
எலும்பு சூப் எடை இழப்பு முதல் ஆண்களின் பல பிரச்சினைகளுக்கு மருந்தாக இருக்கின்றது.
இந்த எலும்புசூப்பில் புரதம் அதிகளவு காணப்படுகிறது. இதன் மூலம் கலோரி கட்டுப்பாட்டை ஊக்குவிக்கிறது.
எலும்பு குழம்பை சாப்பிட்டு வருவது உங்க உணவில் அதிக புரதத்தை சேர்க்க உதவி செய்யும். பொதுவாக மூட்டுவலி முதுகுவலி மூட்டு தேய்மானம் போன்ற எலும்பு சம்பந்தமான பிரச்சினைகளினால் அவதிப்படுபவர்களுக்கு ஆட்டுக்கால் சூப் மிகவும் நல்லது.
வயிற்றிலே இருக்கக்கூடிய நல்ல பாக்டிரியாக்கள் அளவே வந்து அதிகரித்து செரிமானம் சீராக நடைபெற உதவி செய்யும் உடல் எடையை குறைக்கும் உடல் எடையை குறைப்பதற்காக டயட் ஃபாலோ பண்றது உங்களுக்கு மிகச்சிறந்த ஒரு உணவு ஆட்டுக்கால் எலும்பு சூப்.
நம் உடலில் ஓயாது உழைத்துக் கொண்டிருக்கும் இருதய தசைகளை பலப்படுத்தும் ஆற்றல் ஆட்டு எலும்பு சூப்புக்கு உள்ளது.
எலும்பு சாறு எப்படி தயாரிப்பது
- ஆட்டு எலும்பு
- 12 கப் தண்ணீர்
- 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது
- தேவைக்கேற்ப கல் உப்பு
- மிளகு பொடித்தது
- சீரகம் பொடித்தது
- கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை
- 1 துண்டு எலுமிச்சை பழம்
செய்முறை
ஒரு அடிப்பகுதி கனமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.
தண்ணீர் ஆனது 6 கப் வரை வற்றும் வரை 2-3 மணி நேரம் கொதிக்க விட வேண்டும்.
குக்கரில் வைத்தால் அதில் மேற்கண்ட பொருட்களை சேர்த்து எலும்பு சாறு ஆனது தண்ணீரில் நன்றாக இறங்கும் வரை வேக வைக்க வேண்டும்.
இப்பொழுது சுவையான எலும்பு குழம்பை வடிகட்டி அதை ருசியுங்கள். இந்த எலும்பு குழம்பை 2-3 நாட்கள் வரை பிரிட்ஜில் வைத்து கூட பயன்படுத்தலாம். எலும்பு சூப்பில் பல முக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இதில் தாதுக்கள், அமினோ அமிலங்கள் இருப்பது ஆரோக்கிய நன்மைகளை பெற உதவுகிறது.