Lunch Time Recipe:கோழிக்கறி சுவையை மிஞ்சும் காய்கறி குருமா! செய்வது எப்படி?
நாம் எப்போதும் சைவ உணவுகளை சாப்பிட மறுத்துவிடுவோம். அசைவ உணவுகள் என்றும் போது அதில் காய்கறிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் பல வகையான காய்கறிகளை நாம் சாப்பிடுவது முக்கியமாகும்.தினசரி உணவில் காய்கறிகளை சேர்த்து சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
இவை சரியான ஊட்டச்சத்தை வழங்குதல், செரிமானத்தை மேம்படுத்துதல் மற்றும் நாள்பட்ட நோய்களைத் தடுக்க உதவும்.
அந்த வகையில் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட கூடிய காய்கறி குருமா குழம்பு எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு - 2
- காலிஃப்ளவர் - 1
- கப் கேரட் - 1
- பீன்ஸ் - 6
- பட்டாணி - 1 கப்
- பெரிய வெங்காயம் - 2
- பழுத்த தக்காளி - 3
- இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன்
- கரம் மசாலா - 1 டீஸ்பூன்
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- உப்பு - சுவைக்கேற்ப
- தாளிக்க தேவையானவை
- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- பட்டை - 1
- கிராம்பு - 1
- ஏலக்காய் - 1
- கருவேப்பிலை - சிறிதளவு
- மசாலா அரைக்க தேவையானவை
- துருவிய தேங்காய் - 1/2 கப்
- வறுத்த கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
-
சோம்பு - 1 டீஸ்பூன்
முந்திரி - 9
செய்யும் முறை
முதலில் ஒரு மிக்ஸியை எடுத்து அதில் துருவிய தேங்காய், வறுத்த கடலை பருப்பு, சோம்பு மற்றும் முந்திரி ஆகியவற்றை சேர்த்து நன்கு பேஸ்ட்டாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.பின்னர் இதில் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
இதன் பின்னர் வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து வதக்க வேண்டும்.
இது நன்றாக மசாலாக்களின் பச்சை வாசனை போகும்வரை வதக்க வேண்டும். பின்னர் நறுக்கி வைத்துள்ள அனைத்து காய் வகைகளையும் சேர்த்து நன்கு மசாலாக்களுடன் சேரும் வரை கலந்து வதக்கவும்.
இதன் பின்னர் இதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும். இதில் ஒரு கொதி வந்தவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கலந்து மீண்டும் மூடிபோட்டு 10 நிமிடங்களுக்கு கொதிக்கவிடவும்.
காய்கறிகள் நன்கு வெந்து குருமா தயாரானதும் அடுப்பை அணைத்து நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவவும். இப்படி செய்து இறக்கினால் காய்கறி குருமா குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |