மோர்க்குழம்பை மிஞ்சும் இலங்கையின் சொதி: ஒரு தேங்காய் இருந்தால் போதும்
இலங்கையில் பாரம்பரியமாக செய்யப்படும் சொதி ரெசிபியை இந்த பதிவில் பார்க்கலாம். இது பிட்டு், சாதம், இடியப்பம் போன்ற உணவுகளுடன் சாப்பிட பயன்படுத்துகிறார்கள்.
இதை காய்கறி வைத்தும் செய்யலாம் அல்லது மீன் கோழி போன்றவற்றை போட்டும் செய்யலாம். ஆனால் எப்படி எதை வைத்து செய்தாலும் இதற்கு அடிப்படையாக இருக்கும் சொதியின் ரெசிபி ஒரே மாதிரியாக தான் இலங்கையர்கள் செய்கின்றனர். இந்த சொதி ரெசிபியை எப்படி செய்யலாம் என்பதை தொடர்ந்து கவனிக்கலாம்.
தேவையான பொருட்கள்
- கடுகு அரை ஸ்பூன்
- வெந்தயம் அரை ஸ்பூன்
- சீரகம் அரை ஸ்பூன்
- வரமிளகாய் 2
- கறிவேப்பிலை கொஞ்சம்
- தே.எண்ணெய் 2 ஸ்பூன்
- வெங்காயம் 1
- தண்ணீர்- 250 ml
- மிளகு அரை ஸ்பூன்
- பூண்டு 3 பல்
- புளி எலுமிச்சை அளவு
- தேங்காய் பால் 250 ml
- உப்பு தேவையான அளவு
- மஞ்சள் அரை ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணை ஊற்றி கடுகு, வெந்தயம், சீரகம், வரமிளகாய் போட்டு வதக்க வேண்டும். பின்னர் இதனுடன் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் ஒரு மீடியம் அளவில் வெங்காயத்தை ஒரு அளவாக பிறை போல வெட்டி சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும். பின்னர் இதில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
இது கொதிக்கும் சமயத்தில் உரலில் மிளகு, பூண்டு, சீரகம் போட்டு இடித்து எடுத்து கொதிக்கும் கலவையில் போட வேண்டும். பின்னர் புளியை கரைத்து ஊற்ற வேண்டும்.
இதை ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு பின்னர் தேங்காய் பால் சோத்து கொதிக்க விட வேண்டும். பின்பு தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து 3 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கினால் கமகம சுவையான சொதி தயார். இதை சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் சுவை பிரமாதம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |