தென்னிந்தியாவில் பிரபலமான காலை உணவு என்னென்ன தெரியுமா?
தென்னிந்தியாவில் காலை உணவாக இருக்கும் பிரபலமான உணவு வகைகளை தற்போது தெரிந்து கொள்வோம்.
பொதுவாக காலை நேர உணவு என்பது மிகவும் முக்கியமாகும். ஏனெனில் புதிதாக தொடங்கியிருக்கும் அன்றைய நாள் முழுவதும் நாம் ஆரோக்கியத்துடன், உற்சாகத்துடனும் இருப்பதற்கு காலை உணவு முக்கியமாக இருக்கின்றது.
மேலும் காலையில் சாப்பிடும் போது சத்தான சாப்பாட்டை சாப்பிட வேண்டும். சத்து இல்லாத சாப்பாட்டை வயிறு நிறைய சாப்பிட்டால் உடம்பிற்கு எந்தவொரு சக்தியும் கிடைக்காது.
இந்நிலையில் காலை நேரத்தில் தென்னிந்தியாவில் சாப்பிடப்படும் முக்கியமான உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தென்னிந்திய பிரபலமான காலை உணவு
ஆப்பம் புளித்த அரிசி மற்றும் தேங்காயிலிருந்து தயாரிக்கப்படும் மென்மையான, பான்கேக்குகள், பொதுவாக தேங்காய் பால் அல்லது காய்கறி குழம்புடன் பரிமாறப்படுகின்றது.
புளித்த அரிசி மற்றும் உளுந்தம் பருப்பு மாவிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு மெல்லிய மொறுகளான உணவு தோசை ஆகும். இதனை சட்னி மற்றும் சாம்பாருடன் பரிமாறப்படுகின்றது.
புளித்த அரிசி மற்றும் உளுந்து மாவிலிருந்து தயாரிக்கப்படும் வேகவைத்த அரிசி கேக்குகள் தான் இட்லி ஆகும். இதனையும் சட்னி மற்றும் சாம்பாருடன் பரிமாறப்படுகின்றது.
பச்சை பயிறை அறைத்து தோசை போன்று சுட்டு சாப்பிடும் உணவு தான் பேசரட்டு ஆகும். இது பொதுவாக இஞ்சி சட்னி அல்லது உப்புமாவுடன் பரிமாறப்படுகின்றது.
அரிசி மற்றும் பாசி பயிறு இவற்றிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு கிரீமி மற்றும் சுவையான உணவு தான் பொங்கல் ஆகும். இதில் நெய், மிளகு, சீரகம் ஆகியவற்றுடன் சேர்த்து சமைக்கப்படுகின்றது.
உளுந்து அல்லது கடலை பருப்பிலிருந்து தயாரிக்கப்படும் பண்டம் தான் வடை ஆகும். வெளியே மிருதுவாகவும், உள்ளே மென்மையாகவும் இருக்கும் இதனை இட்லி, பொங்கல், பூரி இவற்றுடன் சேர்த்து சாப்பிடுவது தனி ருசி ஆகும்.
ரவையிலிருந்து தயாரிக்கப்படும் உப்புமா ஒரு சுவையான உணவு ஆகும். மசாலாப் பொருட்கள், காய்கறிகள் சேர்த்து சமைக்கப்படும் இதுவும் தென்னிந்தியாவில் பிரபலமான உணவுகளில் ஒன்றாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |