உங்க வீட்ல முட்டையும் கோதுமை மாவும் இருக்கா? சுவையான காலை உணவு தயார்
சுவையான முட்டை பராத்தா எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக காலை உணவு என்பது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் அன்றைய நாள் முழுவதும் நம்மை ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும் வைத்துக் கொள்ள உதவுகின்றது.
இட்லி, தோசை என்று சாப்பிடும் நாம் வீட்டில் வீட்டில் முட்டையும், கோதுமை மாவும் இருந்தால் சத்தான காலை உணவை தயார் செய்துவிடலாம்.
தற்போது சுவையான முட்டை பராத்தா எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 1/2 கப்
முட்டை - 3 (வேக வைத்தது)
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
மிளகுத் தூள் - 1/4 ஸ்பூன்
சீரகத் தூள் - 1/4 ஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு, எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
முட்டை பராத்தா செய்வதற்கு பாத்திரம் ஒன்றில் முட்டைகளை வேக வைத்து துருவி எடுத்து, அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மிளகு தூள், சீரகத் தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலை மற்றும் தேவைக்கு ஏற்ப உப்பு இவற்றினை சேர்த்து கரண்டியால் நன்று கிளறி விடவும்.
பின்பு பாத்திரம் ஒன்றில் கோதுமை மாவை எடுத்துக் கொண்டு அதில் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி நன்றாக கிளறி விடவும்.
சப்பாத்தி பதத்திற்கு மாவை மென்மையாக பிசைந்து எடுத்து வைத்து, 5 நிமிடம் கழித்து மாவை உருண்டையாக உருட்டி எடுத்துக்கொள்ளவும்.
சப்பாத்தி மாவை மெல்லியதாக தேய்த்து அதன் நடுவே 2 ஸ்பூன் மசால் வைத்து ஒரு பகுதியை மடித்து அரை வட்ட அளவில் வைத்து, அடித்த இரு முனையையும் ஃபோர்க் ஸ்பூனால் மீண்டும் அழுத்தி, பின்பு தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி போட்டு எடுக்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |