காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கும் ஆரோக்கிய பானம்
பொதுவாகவே ஒரு நாளை சிறந்த நாளாக மாற்ற காலையில் எடுத்துக் கொள்ளும் உணவு மிக மிக முக்கியமானது. அப்படி காலையில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுதான் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
அப்படி ஆரோக்கியத்தைக் கொடுக்கும் உணவுகளை ஆரோக்கியமாகவும் அதிக சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். ஆனால் ஒரு சிலர் உடல் எடையை குறைக்கும் நோக்கிலும் நேரமின்மையாலும் காலை உணவை தவிர்த்து வருகிறார்கள்.
இவ்வாறானவர்களுக்கு காலை உணவுக்கு பதிலாக ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் சிறந்த பானம் தான் ராகியையும் பாலையும் கொண்டு இலகுவாக செய்யப்படும் ஆரோக்கிய பானம் எப்படி செய்வது என்பது பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ராகி மாவு – 2 கரண்டி
- பாதாம் – 6
- பேரிட்சை பழம் – 7
- பட்டை – 1
- வாழைப்பழம் – 1
- பால் – அரை டம்ளர்
- நாட்டுச்சர்க்கரை – 1 கரண்டி அல்லது தேன் – 1 கரண்டி
செய்முறை
முதலில் ராகி மாவை தண்ணீரில் கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ள வேண்டும். கூழ் தயாரிக்கும் பதத்திற்கு தயாரித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் பாதாம் மற்றும் பேரிட்சைப்பழத்தை 4 மணிநேரத்திற்கு ஊற வைத்து பாதாம் தோலை நீங்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு ஊறவைத்த பாதாம், பேரிட்சைபழம், பால், ராகி கூழ், வாழைப்பழம், நாட்டு சக்கரை என்பவற்றை மிக்சியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்து எடுத்துக் கொண்ட பிறகு ஒரு கிளாசில் ஊற்றி காலை உணவாக குடித்தால் முழு நாளும் ஆரோக்கியமாக இருக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |