முள்ளங்கியை சாம்பார் இப்படி செய்து பாருங்க... கொஞ்சமும் மிஞ்சாது!
தென்னிந்திய உணவுகளில் சாம்பார் என்பது தவிர்க்க முடியாத ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ள பாரம்பரிய உணவாகும். இட்லி, தோசை, பொங்கல், பூரி, சப்பாத்தி, சாதம் என எந்த உணவுடன் சேர்த்தாலும் சுவையை பல மடங்கு உயர்த்துவது சாம்பார்தான்.
பொதுவாக முருங்கைக்காய், வெங்காயம், கேரட் போன்ற காய்கறிகளில் சாம்பார் செய்வது வழக்கம். ஆனால், ஒரே மாதிரியான சுவைக்கு பதிலாக அவ்வப்போது வித்தியாசமான சுவையில் செய்து கொடுத்தால் வீட்டில் உள்ளவர்களும் மகிழ்ச்சியாக சாப்பிடுவார்கள்.

அந்த வகையில், சற்று வித்தியாசமதகவும் ஆரோக்கியம் மற்றும் சுவை நிறைந்ம முள்ளங்கி சாம்பாரை எளிய எப்படி செய்வது என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
அதிகரிக்கும் டெங்கு அச்சுறுத்தல்: ரசாயனமின்றி நுளம்புகளை விரட்டும் எளிய முறைகள் உங்களுக்கு தெரியுமா?
தேவையான பொருட்கள்
வேக வைப்பதற்கு
துவரம் பருப்பு - 1/2 கப்
தக்காளி - 1 (நறுக்கியது)
பூண்டு - 5 பல்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு..
எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - 1 கொத்து
பச்சை மிளகாய் - 3 (கீறியது)
முள்ளங்கி - 2 (நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1/2 கப் + தேவையான அளவு
புளித்தண்ணீர் - 1/4 கப்
கொத்தமல்லி - சிறிது
துருவிய தேங்காய் - 1 ஸ்பூன்

செய்முறை
முதலில் துவரம் பருப்பை 2–3 முறை நன்றாகக் கழுவி, 15 நிமிடங்கள் நீரில் ஊறவைக்கவும். பிறகு, குக்கரில் ஊறவைத்த துவரம் பருப்புடன் நறுக்கிய தக்காளி, பூண்டு, மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
பருப்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 5 விசில் வரும் வரை வேக வைக்கவும். விசில் அடங்கியதும் குக்கரைத் திறந்து, பருப்பை நன்றாக மசித்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, சீரகம், கடுகு, வரமிளகாய் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.
[XFNH7P
பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதன் பிறகு கீறிய பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய முள்ளங்கியைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
இப்போது தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும். அதன்பின் ½ கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 10 நிமிடங்கள் முள்ளங்கி மென்மையாகும் வரை வேக வைக்கவும்.
பிறகு புளிக்கரைசலை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அதனுடன் மசித்த துவரம் பருப்பையும் சேர்த்து, உப்பின் சுவையைச் சரிபார்த்து தேவைப்பட்டால் மேலும் சிறிதளவு உப்பு சேர்க்கவும்.
இறுதியாக, சாம்பாரை 10 நிமிடங்கள் நன்றாகக் கொதிக்கவிட்டு, மேலே கொத்தமல்லித்தழை மற்றும் துருவிய தேங்காயைத் தூவி இறக்கினால், சுவையான முள்ளங்கி சாம்பார் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |