நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும் கத்தரிக்காய் சாதம்... இப்படி செய்தால் கொஞ்சமும் மிஞ்சாது
பொதுவாகவே எல்லா காலங்களிலும் மலிவு விலையில் பெற்றுக்கொள்ளக் கூடிய காய்கறி வகைகளுள் கத்தரிகக்காய் முக்கிய இடம் வகிக்கின்றது.
கத்தரிக்காயில் பல மருத்துவப் பயன்கள் உள்ளன. அவை உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.
குறிப்பாக, கத்தரிக்காய் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கிறது.
கத்தரிக்காய் சாப்பிடுவதால் மூளை மற்றும் உடலின் மற்ற பாகங்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மற்றும் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுபவர்களுக்கு கத்தரிக்காய் ஒரு வரபிரசாதம் என்றே கூறவேண்டும்.
கத்தரிக்காய் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், இது எடை மேலாண்மைக்கு பெரிதும் துணைப்புரிக்கின்றது. இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த கத்தரிக்காய்யில் அசத்தல் சுவையில் எவ்வாறு கத்தரிக்காய் சாதம் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு
கடலைப்பருப்பு
வேர்க்கடலை
காய்ந்த மிளகாய்
சீரகம்
தேங்காய் எண்ணெய்
கடுகு
சீரகம்
பெரிய வெங்காயம்
தக்காளி
கத்தரிக்காய்
கொத்தமல்லி தழை
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், சீரகம், தேங்காய் ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பான பதத்தில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய், கடுகு, சீரகம், நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வதக்கி அதில் நறுக்கிய கத்தரிக்காய் மற்றும் அரைத்து வைத்துள்ள பொடி ஆகியவற்றை சேர்த்து கலந்து விட்டு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
கத்தரிக்காயை எண்ணெயிலேயே வேக வைத்து அதில் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து கிளறிவிட்டு, இறுதியில் கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கினால் அவ்வளவு தான் அருமையான சுவையில் கத்திரிக்காய் சாதம் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
