குழந்தைகளின் ஆற்றலை அதிகரிக்கும் அவல் வேர்க்கடலை லட்டு! வெறும் 10 நிமிடம் போதும்
பொதுவாகவே குழந்தைகள் இருக்கும் வீடுகளில் தினசரி ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் செய்தே தீர வேண்டும். ஆனால் என்ன செய்து கொடுக்கலாம் என குழம்பி தவிக்கும் அம்மாக்களுக்கு தான் இந்த ரெசிபி.
மாலை நேரத்தில் விளையாடிவிட்டு வரும் குழந்தைகளின் பசியை போக்குவதுடன், ஆரோக்கிய நன்மைகளையும் கொடுக்கும் ஒரு அருமையான சிற்றுண்டி தான் வேர்க்கடலை லட்டு.இது தேனீருடன் பக்காவாக பொருந்தும் உணவுகளின் பட்டியலில் முக்கிய இடம் வகிக்கின்றது.

எப்போதும் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு வெறும் பத்தே நிமிடங்களில் ஒரு அருமையான ஈவ்னிங் ஸ்நாக்ஸ் மிகவும் எளிமையாக எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அவல் - 1 கப்
பாசிப்பருப்பு - 1/2 கப்
வறுத்த வேர்க்கடலை - 1 கப்
நெய் - சிறிதளவு
முந்திரி - 10
வெல்லம் - 1 கப்
தண்ணீர் - 1 கப்
ஏலக்காய் தூள் - 1/4 தே.கரண்டி

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் அவலை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி ஒரு தட்டிற்கு மாற்றி குளிரவிட வேண்டும்.
அதனையடுத்து அதே பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அத்துடன் பாசிப்பருப்பை சேர்த்து, நல்ல மணம் வரும் வரையில் வறுத்து இறக்கி மற்றொரு தட்டில் போட்டு அதையும் ஆறவிட வேண்டும்.

பின்னர் அதே பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பச்சை வேர்க்கடலையை சேர்த்து நல்ல மணம் வந்து, நிறம் மாறும் வரை வறுத்து இறக்கி ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும். பின்னர் அதன் தோலை நீக்கி தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் ஒரு மிக்சர் ஜாரில் வறுத்த அவலை சேர்த்து நன்றாக மென்மையாகும் வரையில், அரைத்து பொடி செய்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் வறுத்து தோல் நீக்கி வைத்துள்ள வேர்க்கடலையை மிக்ஸியில் போட்டு, சற்று கொரகொரப்பான பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதே ஜாரில் வறுத்த பாசிப்பருப்பை சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து நன்கு வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே பாத்திரத்தில் 1 கப் வெல்லத்தை சேர்த்து, 1 கப் தண்ணீரை ஊற்றி, வெல்லத்தை கரையவிட வேண்டும்.
வெல்லம் நன்றாக கரைந்ததும், அதில் ஏலக்காய் பொடியையும் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும்.

அடுத்து அதை அடுப்பில் வைத்து, அத்துடன் பொடித்து வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து கட்டிகளின்றி கிளறி, 5 நிமிடம் வேகவிட வேண்டும்.
பின்பு அதில் பொடித்து வைத்துள்ள அவல் மற்றும் வேர்க்கடலையை சேர்த்து நீர் வற்றி கெட்டியாகும் வரை கிளறி விட்டு, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி கிளறி இறக்கி, மூடிபோட்டு குளிரவிட வேண்டும்.
இந்த கலவையானது நன்றாக குளிர்ந்ததும் உருண்டைகளாக பிடித்து, அவற்றின் நடுவே வறுத்த முந்திரியை வைத்தால், சுவையான அவல் வேர்க்கடலை லட்டு தயார். அது சுவையானது மாத்திரமன்றி அதிகமாக விளையாட்டில் ஈடுபடும் குழந்தைகளுக்கு ஆற்றலை வழங்குவதற்கும் உதவுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |