ஆரோக்கியமாகவும் ஈஸியாகவும் தக்காளி குழம்பு செய்யணுமா? அப்போ இந்த முறையை செய்ங்க
தக்காளியில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே ஆகிய சத்துக்கள் உள்ளன. அதேபோல பொட்டாசியம் சத்தும் உள்ளது. வைட்டமின் சி சத்தானது சரும ஆரோக்கியத்திற்கு உதவியாக அமைகிறது.
வைட்டமின் கே சத்தானது ரத்தத்தை உறைய வைப்பதற்கும், எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் அவசியமானதாகும். தக்காளியில் உள்ள லிகோபைன் மற்றும் பீட்டா கரோடின் ஆகிய சத்துக்கள் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மையை கொண்டிருப்பவை.
இதை அப்படியே பச்சையாக எடுத்துக்கொள்வதும் பிரச்சனையை தரும். இதற்காக தான் இந்த பதிவில் தக்காளியை வைத்து எப்படி குழம்பு செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தக்காளி - 2
- பச்சை மிளகாய் - 1
- பூண்டு - 2 பல்
- பொடியாக நறுக்கிய தேங்காய் - சிறிதளவு
- சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
- மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
- மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
- தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
- கடுகு, உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 1
- கறிவேப்பிலை
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
- எண்ணெய் உப்பு - தேவையான அளவு
செய்யும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, தேங்காய் போட்டு வறுத்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின்னர் அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் போட்டு வதக்கி, நறுக்கிய தக்காளிகளைப் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இதன் பின்னர் இதன் பச்சை வாசனை போகும் வரை சீரகத்தூள் போட்டு வதக்க வேண்டும்.
இதன் பின்னர் தேவையான அளவு தண்ணீர் விட்டு, எண்ணெய் பிரிந்து வந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கவும். இப்போது இதை எந்த உணவிவுனும் சேர்த்து சாப்பிடலாம். இதை காலையில் அவசரமாக ஒரு உணவு செய்கிறீர்கள் என்றால் அதற்கு இந்ததக்காளி குழம்பை எடுத்து செல்லலாம்.
தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றங்கள் கொலஸ்ட்ராலைக் குறைப்பதன் மூலம் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.
ஆண்கள் தினமும் தக்காளியை அதிகம் சாப்பிட்டு வந்தால் 20 சதவீதம் புரோஸ்டேட் நோய் வரும் அபாயத்தைக் குறைக்கலாம். வைட்டமின் சி மற்றும் இரும்புச் சத்து இவற்றில் சமமாக உள்ளதால் இரத்த சோகையை குணப்படுத்துகிறது.
தக்காளி சிறுநீரை நன்கு வெளியேற்றுவதுடன் கிருமிகள் அண்டாமல் தடுக்கும். மற்றும் இரத்த சோகை, கல்லீரல் கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |