ஒரே ஒரு ஊறுகாய்க்கு 35 ஆயிரத்தை இழந்த உணவகம்... நடந்தது என்ன?
உணவகத்தில் வாங்கிய பார்சல் சாப்பாட்டில் ஊறுகாய் வைக்காமல் இருந்ததற்கு 35 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊறுகாய் கொடுக்காத உணவகம்
இந்திய மாநிலம் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் வழுதுரெட்டிப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவர் கடந்த 2022ம் ஆண்டு, பாலமுருகன் என்ற உணவகத்தில் பார்சல் சாப்பாடு குறித்து விசாரித்துள்ளார்.
உணவகத்தினர் கூறுகையில், சாப்பாட்டின் விலை ரூ.80 என்றும் அதில் சாதம், சாம்பார், காரக்குழம்பு, ரசம், மோர், கூட்டு, பொறியல், அப்பளம், வாழை இலையுடன் சேர்த்து 1 ரூபாய் ஊறுகாய் பொட்டம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
உடனே ஆரோக்கியசாமி ரூ.2000 கொடுத்து 25 பார்சல் சாப்பாடு வாங்கிச் சென்றுள்ளார். ஆனால் அதில் எந்த பார்சலிலும் ஊறுகாய் இல்லாமல் இருந்துள்ளது.
இதனால் உணவகத்திற்கு வந்தவர், ஊறுகாய்க்கான பணம் ரூ.25ஐ திருப்பிக் கேட்டுள்ளார். ஆனால் உணவகம் தர மறுத்த நிலையில், உடனே மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, உணவில் ஊறுகாய் வைக்காமல் விட்டது தவறு தான். வாடிக்கையாளருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியதால், மனுதாரருக்கு ரூ.30 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு ரூ.5 ஆயிரம், ஊறுகாய்க்கான செலவு ரூ.25 எல்லாவற்றையும் 45 நாட்களுக்குள் கொடுக்கக் கூறியுள்ளார்.
இவ்வாறு கொடுக்க தவறும் பட்சத்தில் மாதம் 9 சதவீதம் வட்டியுடன் குறித்த தொகையை வழங்க வேண்டும் என்று அதிரடி உத்தரவை போட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |