Brain Foods: மூளைக்கு பலம் தரும் 5 சிறந்த உணவுகள்
பொதுவாக ஒமேகா -3 ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் மூளையின் செயல்பாட்டிற்கு உதவியாக இருக்கின்றது.
நினைவுகள், ஆளுமை, அறிவாற்றல் நடவடிக்கை இப்படியான செயற்பாடுகள் சரியாக நடக்க வேண்டும் என்றால் மூளை ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
ஒமேகா -3யுடன் புரதங்கள் நிறைந்த உணவுகளான கோழி, முட்டை, பருப்பு வகைகள் உள்ளிட்ட உணவுகளை அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும்.
இது மூளையிலுள்ள உயிரணுக்களுக்கு இடையிலான தகவல் தொடர்புகளில் முக்கிய பங்கை வகிக்கிறது.
அந்த வகையில் மூளை ஆரோக்கியத்திற்கு உதவக் கூடிய உணவுகள் பற்றி தொடர்பாக தெரிந்து கொள்வோம்.
மூளை ஆரோக்கியம்
1.Blueberries
Blueberries அதிகமாக எடுத்து கொள்ளும் போது அதிலுள்ள ஆண்டி-ஆக்சிடண்டுகளானது ஃபிளாவனாய்டுகளை அதிகப்படுத்தி அறிவாற்றல் செயல்திறனை மேம்படுத்துகின்றது.
2. மீன்
மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களானது அதிகமாக இருப்பதால் மூளை செயல்பாட்டுக்கு சிறந்தது, இது மட்டுமின்றி அறிவாற்றலையும் ஊக்குவிக்கின்றது.
3. Broccoli
மேம்பட்ட அறிவாற்றலை ஊக்குவிக்கவும், மற்றும் ஆண்டி-ஆக்சிடண்டுகள், வைட்டமின்-கே அதிகம் நிறைந்த ப்ரோக்கோலியானது மூளை செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.
4. மஞ்சள்
மஞ்சளானது தடையில்லாமல் ரத்தம் செல்ல பாதை அமைத்துத் தருகிறது. அதுமட்டுமின்றி இதனால் ஏற்படும் நோய்களையும் தடுக்கும் திறன் கொண்டவையாக மஞ்சள் இருக்கிறது.
5. விதைகள்
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை அதிகமாகக் கொண்டுள்ள அக்ரூட் பருப்புகள், பாதாம், சியா விதைகள், ஆளிவிதை போன்றவற்றை சாப்பிட்டு வருவதால் மூளையின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |