உங்களுக்கு 'அரிசி' சாப்பிடும் பழக்கம் இருக்கிறதா? இந்த நோய் தான் காரணம்
பலருக்கு அரிசி சாப்பிடும் பழக்கம் உள்ளது. இது மனநல கோளாறின் அறிகுறியாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
பலர் மண், ஸ்லேட் அல்லது காகிதம் போன்ற விசித்திரமான பொருட்களை சாப்பிடுவதைப் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். இது பிகா எனப்படும் ஒரு வகை நோய்.
இது போல தான் சில மக்கள் அரிசி சாப்பிடுவதற்கும் அடிமையாக இருக்கின்றனர். அரிசியைச் சாப்பிடுவதும் பிகா நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
இது பார்ப்பதற்கு் கேட்பதற்கும் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் இதனால் வரும் விளைவு அதிகம். இது எதனால் வருகின்றது என்பது கூட யாருக்கும் பெரிதாக தெரிவதில்லை. இதை பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
ஏன் அரிசி சாப்பிட ஈர்க்கப்படுகிறோம்
அரிசி சாப்பிட வேண்டும் என்ற ஆசைக்கு பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். சிலருக்கு அதன் அமைப்பு அல்லது சுவை பிடிக்கும்.
அதே நேரத்தில், சில சந்தர்ப்பங்களில் இது உடலில் இரும்பு அல்லது துத்தநாகம் போன்ற சில ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம்.
பொதுவாக இரும்புச்சத்து குறைபாடு கர்ப்பிணி பெண்களுக்கு வரும். அதனால் தான் கர்ப்ப காலத்தில், பெண்களுக்கு அரிசி சாப்பிட ஆசை வருகிறது.
மன அழுத்தம் அல்லது பதட்டம் போன்ற உளவியல் காரணிகளும் இந்தப் பழக்கத்த்தின் அடிப்படை காரணியாக அமையலாம்.
அரிசி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
அரிசி ஜீரணிக்க கடினமாக உள்ளது. இவற்றில் ஆர்சனிக் போன்ற தீங்கு விளைவிக்கும் கூறுகள் உள்ளன.
இதனால் வயிற்று வலி, வாயு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். இது பற்களிலும் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
பிகா நோய் என்றால் எனன்ன?
பிகா என்பது ஒரு உணவுக் கோளாறு ஆகும். இதனால் ஒரு நபர் ஊட்டச்சத்து மதிப்பு இல்லாத பொருட்களை சாப்பிட விருமபுகிறார்.
இந்தப் பழக்கம் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது. இத தவிர சிலர் சேறு, பனி, வண்ணப்பூச்சு, முடி மற்றும் சமைக்காத அரிசி போன்றவை பிகா நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஈர்க்கும்.
இந்த பழக்கத்தை எப்படி தடுப்பது
ஒருவருக்கு தொடர்ந்து அரிசியை சாப்பிடும் பழக்கம் இருந்தால் அதை தடுப்பது அவசியம். முதலில் நீங்கள் செய்ய வேண்டியது ஒரு மருத்துவரிடம் சென்று உடலில் ஏதேனும் ஊட்டச்சத்துக்கள் குறைபாடு உள்ளதா என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
சில சந்தர்ப்பங்களில், உளவியல் ஆலோசனையும் தேவைப்படலாம். அரிசி சாப்பிடுவது உங்களுக்கு தற்காலிக திருப்தியைத் தந்தாலும் அது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
எனவே, இந்தப் பழக்கத்தை அடையாளம் கண்டு சரியான நேரத்தில் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க நல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
