ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் சத்து மாவு... வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
வளரும் குழந்தைகளுக்கு சத்துமாவு கொடுப்பது மிகவும் நல்லது. குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் இதனை காலை உணவாகவும், மாலையிலும் கூட எடுத்துக் கொள்ளலாம்.
வீட்டிலேயே சுவையான ஆரோக்கியமான சத்துமாவு தயார் செய்வது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
பச்சை பயறு - 1/2 கப்
தினை - 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 1/4 கப்
கொள்ளு - 1/2 கப்
கைக்குத்தல் அரிசி - 1/4 கப்
பொட்டுக்கடலை - 1/2 கப்
கோதுமை மாவு - 1/2 கப்
ராகி மாவு - 1/2 கப்
மக்கா சோளம் - 1/2 கப்
வேர்க்கடலை - 1/4 கப்
முந்திரி - 1/4 கப்
பாதாம் - 1/4 கப்
ஏலக்காய் - 10
சுக்கு பொடி - 2 டீஸ்பூன்
செய்முறை
வாணலியை அடுப்பில் வைத்து சூடான பின்பு அதில் மேலே கூறப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பொன்னிறமாக வறுத்து முடித்த பின்பு பாத்திரத்தில் கொட்டி நன்கு குளிர வைக்க வேண்டும். நன்று சூடு ஆறியதும், அதனை மிக்ஸி ஜாரிலோ அல்லது அரவை மிஷினிலோ கொடுத்து மாவாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பின்று அரைத்து வைத்துள்ள பொடியை சல்லடையால் சலித்து, காற்றுப்புகாத ஒரு கண்டெய்னரில் போட்டு சேகரித்துக் கொண்டால், சத்து மாவு தயார்.
இந்த சத்து மாவை செய்யும் போது சிறிது எடுத்து பாத்திரத்தில் போட்டு, அதில் பால் அல்லது நீர் சேர்த்து கலந்து, சுவைக்கேற்ப சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து, கூல் பதத்திற்கு நன்கு கிண்டி எடுத்துக் கொள்ளவும். தற்போது சுவையான சத்துமாவு கஞ்சி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |