மீன் எண்ணெய் உடல் ஆரோக்கியத்திற்கு உண்மையிலேயே நல்லதா? ஆய்வுத் தகவல்
மீன் எண்ணெய் உங்கள் இதய ஆரோக்கியத்திற்கான அனைத்து வகையான நன்மைகளையும் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் அது உண்மையில் இதய ஆரோக்கியத்துக்கு எந்தளவு நன்மை பயக்கும் அதில் ஏதும் மிகைப்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சிறந்த முறையில், மீன் எண்ணெய் மாத்திரைகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது செய்ய வாய்ப்பில்லை - மேலும் மோசமான நிலையில், அவை உண்மையில் பக்கவாதத்திற்கான உங்கள் ஆபத்தை அதிகரிக்கலாம் என ஒரு ஆய்வு குறிப்பிடுகின்றது.
மீன் எண்ணெயின் நன்மைகள்
இருப்பினும் மீன் எண்ணெய் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் குறைப்பதன் மூலம் உங்கள் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் ஏனென்றால், மீன் எண்ணெய் சப்ளிமெண்ட்ஸ் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் மாத்திரை வடிவமாகும், அவை பல தசாப்தங்களாக ஆய்வு செய்யப்பட்டு இதய ஆரோக்கியத்திற்கான நன்மைகளை நிரூபிக்கின்றன.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஹெர்ரிங், காட்டு சால்மன், புளூஃபின் டுனா மற்றும் கானாங்கெளுத்தி போன்ற மீன்களில் காணப்படும் அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும்.
உங்கள் உடலால் அவற்றை சொந்தமாக உருவாக்க முடியாது, அதனால்தான் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள மீன் ஆரோக்கியமான உணவின் முக்கிய பங்கு வகிக்கின்றது.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களைக் கொண்ட மீன்களை அதிகம் உண்ணும் மக்கள் இதய நோய் அபாயத்தில் 90 வீதம் பாதுகாக்கபப்படுகின்றனர்.
இது இரத்த அழுத்தப் பிரச்னையைச் சரி செய்ய உதவுவதுடன் மாரடைப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உதவுகின்றது. வயது முதிர்வால் ஏற்படும் மூட்டு வலி, எலும்பு தேய்மான பிரச்சினையைச் சரியாக்குவதோடு மூளை வளர்சிக்கு மிகவும் உதவுகின்றது.
கண்கள், சருமம், முடி ஆகியவற்றின் ஆரோக்கியத்துக்கும் சர்மம் இளமையாக இருப்பதற்கும் ஒமேகா-3 இன்றியமையாததாகவுள்ளது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உடலிலுள்ள நச்சுகளை வெளியேற்றவும் உதவி புரிகின்றது.
தீவிர உடற்பயிற்சி செய்பவர்கள், பயிற்சி செய்து முடித்ததும் மீன் எண்ணெய் மாத்திரைகளை உட்கொண்டால், உடல் வலி நீங்கும் மற்றும் குடல் ஆரோக்கியமாக இருக்கவும் உதவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |