உங்களுக்கு அடிக்கடி விக்கல் வருதா? இந்த உயிர்கொல்லி நோயின் அறிகுறியா இருக்கலாம் ஜாக்கிரதை!
பொதுவாகவே அனைவருக்கும் விக்கல் ஏற்படுவது இயல்பான விடயம் தான் அனைவருமே அதனை அனுபவித்திருக்கக்கூடும்.
ஆனால் விக்கல் எதனால் ஏற்படுகின்றது என்பது குறித்து பலரும் சிந்தித்திருக்க மாட்டார்கள். அந்த வகையில் விக்கல் ஏற்படுவதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் தொடர்ச்சியாக விக்கல் ஏற்படுவதன் அபாயம் தொடர்பிலும் இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
நாம் சுவாசிக்கும்போது காற்றை உள் இழுக்கிறோம். அப்போது மார்புத் தசைகள் விரிகின்றன. மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் நுரையீரலை ஒட்டியுள்ள உதரவிதானமும் விரிகிறது.
உடனே, தொண்டையில் உள்ள குரல்நாண்கள் திறக்கின்றன. அப்போது நுரையீரலுக்குள் காற்றின் அழுத்தம் குறைந்து நுரையீரலுக்குள் காற்று செல்ல அதிக இடம் கிடைத்து நாம் சுவாசிக்கும் காற்று, திறந்த குரல் நாண்கள் வழியாகத் தங்கு தடையின்றி நுரையீரல்களுக்குள் நுழைந்துவிடுகிறது.இதுதான் இயல்பான சுவாச நிகழ்வு.
ஆனால் சில சமயம், மார்புப் பகுதி நரம்புகள் உதரவிதானத்தை எரிச்சல்படுத்தி அது மூளைக் கட்டுப்பாட்டை மீறி, தன்னிச்சையாகத் திடீரென்று சுருங்க ஆரம்பித்துவிடும்.
அப்போது குரல்நாண்கள் சரியாகத் திறப்பதில்லை.அதன் போது நாம் சுவாசிக்கும் காற்று குரல்நாண்களின் குறுகிய இடைவெளி வழியாகத்தான் நுரையீரல்களுக்குள் சென்று திரும்ப வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
அப்போது அந்தக் காற்று, தொண்டையில் தடைப்படுவதனால் ‘விக் விக்...' என்று ஒரு வித்தியாசமான ஒலியை ஏற்படுத்துகின்றது. இதுதான் ‘விக்கல்'. ஏற்படுவதற்கு காரணம்.
மிகவும் வேகமாக உணவைச் சாப்பிடுவது, மிகச் சூடாக சாப்பிடுவது, தேவையான அளவுக்குத் தண்ணீர் அருந்தாமை போன்றன விக்கலுக்கு முக்கியக் காரணங்கள்.
தொடர்ச்சியாக விக்கல் ஏற்படுவதன் விளைவுகள்
விக்கல் 48 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் போது, அவை சிக்கலானது. ஏனெனில் நாள்பட்ட விக்கல் பல நோய்களின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.
நாள்பட்ட விக்கல்கள் அடிப்படை உடல் நலப் பிரச்சனைகளை அதிகரிக்கக் கூடும் எனவே விக்கலை சாதாரணமாக எடுத்துக் கொண்டு புறக்கணிக்கக் கூடாது.
உங்கள் நாள்பட்ட விக்கல்களுக்கு எது காரணமாக இருக்கக்கூடும் என்பதை மருத்துவரை அணுகி உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த நரம்புகள் உதரவிதானத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் உங்கள் நரம்புகளில் விக்கல் மற்றும் எரிச்சலுக்கு வழி வகுக்கும். இதனால் உங்களுக்கு கழுத்து நரம்பில் ஏற்படும் பிரச்சனையால் கட்டிகள் ஏற்பட வாய்ப்பு காணப்படுகின்றது.
நரம்பு மண்டலத்தை பாதிக்கும் எந்தவொரு தொற்று அல்லது பிரச்சனையும் நம் நாள்பட்ட விக்கல்களில் பிரதிபலிக்கக் கூடும். மூளை சுவாசத்தைக் கட்டுப்படுத்துவதால் கூட அடிக்கடி விக்கல் ஏற்படுவதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது.
மூளைக் காய்ச்சல், பக்கவாதம், மூளைக் கட்டிகள், மற்றும் முதுகெலும்பு காயங்களால் கூட தொடர் விக்கல் ஏற்படலாம்.
இருதய பிரச்சனைகள், மாரடைப்பு மற்றும் வீக்கம் போன்றவற்றின் காரணமாகவும் விக்கல் ஏற்படலாம். இவை மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறிகளாக கூட இருக்க வாய்ப்பு காணப்படுகின்றது.
இதுமட்டுமின்றி, நாள்பட்ட விக்கல்களுக்கு புற்று நோய் கூட அடிப்படை காரணமாக இருக்கக் கூடும். பதட்டம் அல்லது மனச் சோர்வினால் ஏற்படும் மன உளைச்சல் கூட விக்கல் ஏற்பட வாய்ப்பு காணப்படுகின்றது.
நமது வயிறு, குடல், கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான பிரச்சனை கூட விக்கல் ஏற்படுவதற்கு காரணமாகும். நம் வயிற்று சம்பந்தப்பட்ட பிரச்சினை குறிப்பாக இரைப்பை மற்றும் குடல் பிரச்சனைகளால் கூட விக்கல் ஏற்படும்.
அதேபோல் விக்கல் ஏற்படுத்தும் சில நோய்கள் உள்ளன. வயிற்றுப் புண், மஞ்சள் காமாலை, காலரா, குடல் அழற்சி, நாட்பட்ட நோய்களால் கூட விக்கல் வரும்.
நாம் சில மருந்துகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் கூட நமக்கு விக்கல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
விக்கலை ஏற்படுத்தும் பகுதிகளில் செய்யக்கூடிய அறுவை சிகிச்சைகள், நரம்பு மண்டலம், மூளை, இரைப்பை குடல் பகுதிகள் அல்லது உதரவிதானம் சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சைகள் கூட விக்களைத் தூண்டும்.
இவ்வாறு தொடர்ச்சியாக விக்கல் ஏற்பட்டால் இதனை ஒருபோதும் அலட்சியப்படுத்தக்கூடாது. உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |