peanut chutney: ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் வேர்கடலை சட்னி
வேர்க்கடலையில் புரதங்கள், எண்ணெய் மற்றும் நார்ச்சத்துகள் செறிந்து காணப்படுவதால், வேர்க்கடலை நமது தோலை மென்மையாக வைத்திருப்பதுடன் காயங்களை குணப்படுத்துதிலும் ஆற்றல் காட்டுகின்றது.
இதய நோய் உள்ளவர்கள், கொலஸ்டிரால் உள்ளவர்கள் கூட முழுமையாக வேர்க்கடலையை தவிர்க்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. மிதமான அளவில் வேகவைத்து எடுத்துக் கொள்ளலாம்.
நீரழிவு பிரச்சினை இருப்பவர்கள், உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் வேர்க்கடலையை முற்றிலும் தவிர்ப்பார்கள். ஆனால் இதில் உடலுக்கு நன்மை செய்யும் நல்ல கொழுப்புச்சத்து அதிக அளவில் காணப்படுகின்றது.
வேர்கடலை சாப்பிடுவது, ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கிறது,தசைகளை வலுப்படுத்தவும் துணைப்புரிகின்றது.
இது சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் கொடுப்பதுடன் மூளை சீராக செயற்படவும் உமவுகின்றது இத்ததை ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த வேர்க்கடலையை கொண்டு அசத்தல் சுவையில் எவ்வாறு சட்னி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
காய்ந்த வேர்க்கடலை - 250 கிராம்
காய்ந்த மிளகாய் - 4
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
பூண்டு - 5 பல்
தாளிப்பதற்கு தேவையானவை
நல்லெண்ணெய் - 1 தே.கரண்டி
கடுகு - 1/4 தே.கரண்டி
உழுந்தம், பருப்பு சீரகம் - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் காய்ந்த வேர்க்கடலையை ஒரு சூடான பாத்திரத்தில் போட்டு நன்றாக வாசனை வரும் அளவுக்கு வருத்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத் வேர்க்கடலையை நன்றாக ஆறவிட்டு, வர மிளகாய், புளி, பூண்டு, கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள வேர்க்கடலை சட்னியில் சேர்த்து கலந்து விட்டால், அவ்வளவு தான் அருமையான சுவையில் ஆரோக்கியம் நிறைந்த கெட்டியான வேர்கடலை சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |