ஹீமோகுளோபின் அளவு ரொம்ப கம்மியா இருக்கா..? அப்போ இந்த உணவுகளை தவிர்க்காதீங்க
பொதுவாக இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு சரியாக இருக்கும் பொழுது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
சிலர் உணவுகளில் இயற்கையாகவே இரும்புச்சத்து இருக்கும். இந்த உணவுகளை அடிக்கடி எடுத்து கொள்ளும் போது இரத்தசோகை போன்ற நோய்கள் ஏற்படாது.
ஹீமோகுளோபின் உடலின் மற்ற பாகங்களுக்கு ஆக்ஸிஜனை செலுத்தி அவற்றிலிருந்து கார்பன் - டை- ஆக்ஸைடை உறிஞ்சி நுரையீரலுக்கு கடத்துகிறது.
அப்படி உங்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கிறது எனில் இரத்தத்தில் சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று அர்த்தம்.
இப்படியானவர்கள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்ய என்ன மாதிரியான பழங்களை எடுத்து கொள்ள வேண்டும் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் உணவுகள்
மாதுளை
மாதுளம்பழத்துக்கு அயல்நாடுகளில் இன்னொரு பெயர் உண்டு அது " Chinese Apple".மாதுளம் பழம் சிகப்பாயிருப்பதன் காரணம் அதில் இருக்கக்கூடிய Anthocyanin என்கிற பிக்மென்ட்டான நிறமியே அதற்கு அந்நிறத்தை அளிக்கிறது.
இதில் இரும்புச்சத்தானது மிகவும் குறைவு.100கிராம் மாதுளம்பழத்தில் 0.3 மி.கிராம் தான் இரும்புச்சத்துள்ளது. எனவே ஒரு நாளைக்கு குறைந்தது 1 கிலோ மாதுளம்பழத்தை உட்கொண்டால் தான் 3 மி.கிராம் இரும்புச்சத்து கிடைக்கும். ஆனால் சராசரி மனிதனுக்கு 15 மி.கிராம் இரும்புச்சத்து தேவை. எனவே நீங்கள் 5 கிலோ மாதுளம்பழத்தை உட்கொண்டால் மட்டுமே 15 மி.கிராம் இரும்புச்சத்து கிடைக்கும்.
பீட்ரூட்
பீட்ரூட் என்பது பூமிக்கடியில் விளையும் ஒரு காய்கறி வகையாகும்,
மற்றும் அதில் பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. அதனால் தான்
அவை நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
பீட்ரூட்டில் உள்ள Betalain என்கிற பிக்மென்ட்டான நிறமியே அதற்கு அந்நிறத்தை அளிக்கிறது. இதிலும் இரும்புச்சத்தானது மிகவும் குறைவு.
100கிராம் பீட்ரூட்டில் 0.8 மி.கிராம் தான் இரும்புச்சத்துள்ளது. எனவே ஒரு நாளைக்கு 2 கிலோ பீட்ரூட்டை உட்கொண்டால் தான் 15 மி.கிராம் இரும்புச்சத்து கிடைக்கும்.
இரும்புச்சத்து அதிகமுள்ள உணவு வகைகள்:
ஈரல் மற்றும் மட்டன் போன்ற உணவுகளில் இரும்புச்சத்தானது அதிகமுள்ளதால் அசைவம் சாப்பிடக்கூடியவர்கள் எடுத்துக்கொள்ளலாம்.
400 மற்றும் 500 மி.கிராம்(1 அல்லது 2 கட்டு கீரை) மற்றும் முளைகட்டிய பச்சைப்பயிர் வகைகளிலும் இரும்புச்சத்தானது அதிகமுள்ளதால் சைவ உணவை உட்கொள்பவர்கள் எடுத்துக்கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |