நகம் கடிக்கும் பழக்கம் இருக்கா ? அப்போ இந்த ஆபத்து இருக்கும் ஜாக்கிரதை
நமது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் இருக்கும் ஒரு கெட்டபழக்கமாக பார்க்கப்படும் பழக்கம் நகம் கடிக்கும் பழக்கத்தைால் ஏற்படக்கூடிய தீங்கு என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
நகம் கடிக்கும் பழக்கம்
நகங்களை கடிப்பதால் நகங்களில் இருக்கும் பாக்டீரியாக்கள் வாய் வழியாக உடலுக்குள் நுழையும். இதனால் பரோனிசியா எனப்படும் பாக்டீரியா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்த தொற்று படிப்படியாக உடலை ஆக்கிரமித்து பெரிய நோய்களுக்கு வழிவகுக்கும். நகம் கடிக்கும் போது நமது சதைப்பகுதியும் சேர்ந்து கிழிகிறது.
இதை குறுகிய நேயரத்தில் வைத்தியரிடம் சென்று காட்டாவிட்டால் காய்ச்சல், உடல்வலி போன்ற பிரச்னைகள் ஏற்படும். நீரிழிவு நோயாளிகளுக்கு இது பேராபத்தை வரவழைக்கும்.
நகம் கடிப்பதால் வயிற்றில் அழுக்கு சேரும். செரிமான அமைப்பு மற்றும் வளர்சிதை மாற்றத்தில் கடுமையான சேதம் ஏற்படுகிறது.
நகம் கடித்தால் அதன் மீது சேரும் பூஞ்சை வாய் வழியாக உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவும். எனவே நகங்களை கடிக்காமல் அடிக்கடி வெட்டி விடுவது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |